ஹெலிகாப்டர் சகோதரர்கள் சொன்னபடி பணத்தைத் திருப்பித் தராமல் ரூ.15 கோடியை மோசடி செய்துவிட்டனர். பணத்தைக் கேட்டால் அடியாட்களை வைத்து எங்கள் உயிருக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.
ஜபருல்லா-பைரோஸ் பானு தம்பதியர்
கும்பகோணம்: பொதுமக்கள், வர்த்தகர்களிடம் ஒரு பங்கு பணம் கொடுத்தால் அதை இரு மடங்காக பெருக்கித் தருவதாகக் கூறி ரூ.600 கோடி பணத்தை ெஹலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இருவர் மோசடி செய்துவிட்டதாக கும்ப கோணம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
நிதி நிறுவன மோசடி தொடர்பாக சகோதரர்கள் மீது தஞ்சை மாவட்ட குற்றத் தடுப்புப் போலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
அவர்களது வீட்டை போலிசார் ஆய்வு செய்தபோது இருவரும் தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் பிடிக்க ஆறு தனிப்படை போலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணம், தீட்சிதர் தோட்டம் தெரு வைச் சேர்ந்தவர்கள் தொழிலதிபர்களான சகோதரர்கள்.
எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சாமிநாதன் ஆகிய இருவரும் எப்போதும் ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால் 'ஹெலிகாப்டர் சகோதரர்கள்' என அழைக்கப் பட்டு வந்துள்ளனர்.
கும்பகோணத்தில் தங்களது 'விக்டரி ஃபைனான்ஸ்' நிதி நிறு வனத்தில் பணம் முதலீடு செய்தால் இரு மடங்காகத் திருப்பித் தரப்படும் என ஆசை வார்த்தை கூறி பலரை ஏமாற்றியுள்ளனர்.
தற்போது ஜபருல்லா-பைரோஸ் பானு தம்பதியர் தஞ்சை மாவட்ட போலிஸ் அதிகாரி தேஷ்முக் சேகர் சஞ்ஜய்யிடம் அளித்துள்ள புகார் மனுவில், "ஹெலிகாப்டர் சகோதரர்கள் சொன்னபடி பணத்தைத் திருப்பித் தராமல் ரூ.15 கோடியை மோசடி செய்துவிட்டனர். பணத்தைக் கேட்டால் அடியாட்களை வைத்து எங்கள் உயிருக்கு மிரட்டல் விடுக்கின்றனர். ஆட்சியில் உள்ளவர்களின் செல்வாக்கு இருப்பதாகவும் மிரட்டுகின்றனர்," என்று கூறியுள்ளனர்.

