சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 183ஆக சரிந்தது.
சென்னையைப் பொறுத்தவரை 138 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் 2,423 பேர் கிருமித்தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
பெருந்தொற்றுக்கு மேலும் 27 பேர் பலியானதாகவும் தமிழ்நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 26,158ஆக குறைந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட அறிக்கை விவரம் தெரிவித்துள்ளது.

