தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதையல் ஆசை: பூசை போட்டு, வீட்டுக்குள் 20 அடி ஆழ குழிதோண்டிய கும்பல்

1 mins read
16aca7c8-9a17-4975-b0b6-873645f1658a
-

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தரைத்தளத்துடன் கூடிய ஒரு வீட்டின் அடியில் பொன்னும் பொருளும் புதைக்கப் பட்டிருப்பதாக சோதிடர் ஒருவர் கூறியதைக் கேட்டு, பூ, பழத்துடன் பூசைகள் செய்து, வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு வீட்டின் உரிமையாளர் குழிதோண்டி உள்ளார். இந்த முயற்சியில் இறங்கிய ஏழு பேரைப் பிடித்து போலிசார் விசாரித்து வருகின்றனர். விளாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ் வியாபாரி யான பிரபுவின் வீட்டிற்குள் புதையல் இருப்பதாக சோதிடர் ஒருவர் கூற, பரமத்திவேலூரைச் சேர்ந்த பூசாரி கிருஷ்ணமூர்த்தியும் அவரது நண்பர்களுமாக ஏழு பேர் சேர்ந்து பூசை செய்துள்ளனர்.

பின்னர் பிரபுவின் வீட்டிற்குள்ளேயே மூன்று நாட்களாக இரவு பகலாக 20 அடி ஆழத்திற்கு மேல் குழி தோண்டி உள்ளனர். இந்த தகவலை அறிந்தவர்கள் புதையலுக்காக நரபலி கொடுக்கப் பட்டிருக்கலாம் என்ற அச்சம் ள்ளதாக பெரம்பலூர் போலிசாருக்குத் தகவல் கூறினர். இதையடுத்து அந்த வீட்டிற்குச் சென்ற போலிசார் ஏழு பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.