முன்னாள் அதிமுக அமைச்சரின் வீடு, நிறுவனங்களில் சோதனை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார்; லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை

முன்னாள் அதிமுக அமைச்சரின் வீடு, நிறுவனங்களில் சோதனை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார்; லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை

2 mins read
d6ecd7ba-4881-4fe7-847a-010fb7deeb7b
முன்­னாள் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர். படங்கள்: தமிழக ஊடகம் லஞ்ச ஒழிப்புத் துறை அதி­கா­ரி­களின் சோதனையை ஒட்டி கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டின் எதிரில் போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். -
multi-img1 of 2

கரூர்: முன்­னாள் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் எம்.ஆர். விஜ­ய­பாஸ்­க­ருக்­குச் சொந்­த­மான வீடு, அலு­வ­ல­கம், நிறு­வ­னங்­களில் 50க்கும் மேலான லஞ்ச ஒழிப்­புத் துறை போலி­சார் நேற்று திடீ­ரென்று அதிரடிச் சோதனை நட­வ­டிக்­கை­களை முடுக்கிவிட்­ட­னர்.

சென்­னை­யில் ஓரிடத்­தி­லும் கரூர் மாவட்­டத்­தில் 20 இடங்­க­ளி­லும் இச்சோதனை தொடர்ந்­தது.

கடந்த அதி­முக ஆட்­சி­யில் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­ச­ராக ­விஜ­ய­பாஸ்­க­ர் இருந்­த­போது, வரு­மா­னத்துக்கு அதி­க­மாக சொத்து குவித்­த­தா­க­வும் அர­சுப் போக்­கு­வ­ரத்துக் கழ­கங்­க­ளுக்கு இழப்பு ஏற்­ப­டும் வகையில் முறை கேடாக ஊழ­லில் ஈடு­பட்­ட­தா­க­வும் இவர் மீது புகார் கூறப்பட்டது.

வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை ஏலக் குத்தகைக்கு விடுவதில் முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

­இதையடுத்து, இச்சோதனை கள் நடத்­தப்­ப­டு­வ­தா­க தகவல்கள் பரவிய நிலையில், விஜ­ய­பாஸ்­கர் வீட்­டின் முன்பு அவ­ரது ஆதரவாளர்­கள் குவிந்­த­னர்.

அதே­போல் அவரது இல்­லம் முன்பு போலி­சா­ரும் பாது­காப்­புப் பணி­க்காக நின்றி­ருந்­த­னர்.

கரூர் செல்­வ­ந­க­ரி­லுள்ள விஜ­ய­பாஸ்­க­ரின் வீடு, அவ­ரது தாய் வீடு, அவ­ரது சாயப்பட்­டறை, அட்டை தயா­ரிப்பு நிறுவனம் ஆகிய இடங்­களிலும் சோதனை நடந்தது.

விஜயபாஸ்­க­ரின் சகோ­த­ரர் சேக­ரின் வீடு, சேக­ரின் சம்­பந்தி வீட்டி ­லும் இந்தச் சோதனை நடப்­ப­தாக தகவல்கள் வெளியாகி­ன.

பர­மத்­தி­யி­ல் உள்ள கல்­கு­வாரி, மில்­கேட்­டி­ல் உள்ள தறி பட்­ட­றை­யிலும் சோதனை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்­புத் துறை போலி­சார், விஜ­ய­பாஸ்­க­ரின் உத­வி­யா­ளர்­களான சுப்­பி­ர­மணி, ரமேஷ், கார்த்தி ஆகி­யோ­ரது வீடு­க­ளி­லும் விஜ­ய­பாஸ்­கரின் ஆத­ர­வா­ளர் ஏகாம்­ப­ரம் வீட்­டி­லும் சோதனை நடத்­தி­னர்.

இந்தச் சோதனையில் கைப்பற்றப் பட்ட பொருள்கள், ஆவணங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அண்­மை­யில் நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் கரூர் தொகு­தி­யில் போட்­டி­யிட்டு திமுக வேட்­பா­ளர் செந்­தில் பாலா­ஜி­யி­டம் விஜயபாஸ்கர் தோல்­வி­ய­டைந்­தார்.

திமுக ஆட்­சிக்கு வந்தபிறகு ஒரு சில முக்­கிய அமைச்­சர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப் படும் என்று செய்­தி­கள் வெளி­வந்த நிலை­யில், இப்போது விஜ­ய­பாஸ்­கரின் வீடு சோதனைக்கு ஆளாகி உள்ளது.

இதனிடையே, அரசியல் காழ்ப் புணர்ச்சியோடு எம்.ஆர். விஜய பாஸ்கர் இல்லத்தில் சோதனை நடத்தப்படுவதாக அதிமுக ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.