மகாராஷ்டிராவில் கனமழை; 71 பேர் உயிரிழப்பு

மும்பை: தென்­மேற்­குப் பரு­வ­ம­ழை­யால் மகா­ராஷ்­டி­ரா­வின் பல்­வேறு மாவட்­டங்­களில் கடந்த சில நாட்­க­ளாக கன­மழை பெய்து வரு­கிறது. நேற்­றி­ரவு ராய்­காட் மாவட்­டத்­தில் பெய்த கன­ம­ழை­யால் பல இடங்­களில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. இதில் 38 பேர் உயி­ரி­ழந்­த­தா­க­வும், மழை, வெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலியானதாகவும் 30க்கு மேற்­பட்­டோ­ரைக் காண­வில்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

கொங்­கன் மண்­ட­லத்­தில் உள்ள ராய்­காட் மாவட்­டத்­தில் கடந்த இரு நாட்­க­ளாக இடை­வி­டாது பெய்த கன­ம­ழை­யால், ஆறு­களில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது. பல்­வேறு கிரா­மங்­களை வெள்ள நீர் சூழ்ந்­துள்­ளது.

வெள்­ளத்­தில் சிக்­கிய மக்­களை மீட்­கும் பணி­யில் தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யி­னர், தீய­ணைப்­புப் படை­யி­னர், காவல்­துறை, விமா­னப் படை­யி­னர் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். ஏறக்­கு­றைய 40 ஆண்­டு­களில் இல்­லாத அள­வில் மகா­ராஷ்­டி­ரா­வில் இப்­போது மழை பெய்து வரு­கிறது.

இதில் ராய்­காட் மாவட்­டம், மகாத் பகு­தி­யில் பெய்த கன­ம­ழை­யால் தெலி கிரா­மத்­தில் நேற்று முன்­தி­னம் இரவு திடீ­ரென நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது.

இந்த நிலச்­ச­ரி­வில் அந்த கிரா­மத்­தில் உள்ள ஏரா­ள­மான வீடு­களும், அதில் குடி­யி­ருந்­த­வர்­களும் மண்­ணில் புதைந்­தி­ருக்­க­லாம் என அஞ்­சப்­ப­டு­கிறது.

அந்­தக் கிரா­மத்­தில் மீட்­புப் பணி­மு­டுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது. மண்­ணில் புதை­யுண்­ட­வர்­களில் இது­வரை 36 பேரின் உடல்­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ரத்­ன­கிரி மாவட்­டத்­தில் வஷிஸ்டி ஆற்­றில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு சாலை­கள் அடித்­துச் செல்­லப்­பட்­டன. வீடு­களை வெள்­ள­நீர் சூழ்ந்­துள்­ளது.

மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்டு மக்­கள் வீடு­களில் முடங்­கி­யுள்­ள­னர். தொலைத்­தொ­டர்­பு­களும் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

மும்­பை­யில் இருந்து 250 கி.மீ தொலை­வில் உள்ள ரத்­ன­கிரி மாவட்­டத்­தில் உள்ள கட­லோர நக­ர­மான சிப்­லுன் முற்­றி­லும் மூழ்­கி­யுள்­ளது.

மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் இன்­னும் மூன்று நாட்­க­ளுக்­கு கன­மழை நீடிக்­கும் என வானிலை நிலை­யம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

கொங்­கன் பகு­தி­யில் பல இடங்­களில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­ட­தா­கத் தக­வல் கிடைத்­துள்­ளது.

ஆபத்­தான பகு­தி­களில் வசிக்­கும் மக்­கள் அர­சின் நிவா­ரண முகாம்­க­ளுக்­கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்­லு­மாறு முதல்­வர் உத்­தவ் தாக்­கரே கேட்­டுக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!