தெலுங்கானாவில் கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெலுங்கானாவில் கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2 mins read
ec13c3ca-f04d-42c6-b76d-0fc42df28135
-

ஹைத­ரா­பாத்: தெலுங்­கானா முழு­வ­தும் இடை­வி­டா­மல் பெய்­து­வ­ரும் கன­ம­ழை­யால் வடக்கு மாவட்­டங்­க­ளான நிர்­மல், ஆதி­லா­பாத், கொமு­ரம் பீம், ஆசி­பா­பாத் மற்­றும் நிஜா­மா­பாத் ஆகிய பகு­தி­களை மழை நீர் சூழ்ந்­துள்­ளது. நீர்­நி­லை­கள் நிரம்பி குடி­யி­ருப்­புப் பகு­தி­கள் முழு­வ­தும் வெள்­ளக்­கா­டாக காட்­சி­ய­ளிக்­கின்­றன.

தாழ்­வான பகு­தி­யில் உள்ள நிர்­மல் நகர் உள்­ளிட்ட பகு­தி­களில் உள்ள பெரும்­பா­லான சாலை­கள் தண்­ணீ­ரில் மூழ்­கின. பல­ரின் வீடு­க­ளுக்­குள் தண்­ணீர் புகுந்­த­தால் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட மக்­கள் தங்­கள் வீடு­களை இழந்து முகாம்­களில் தஞ்­ச­ம­டைந்­துள்­ள­னர்.

நிர்­மல் நக­ரத்­தின் அரு­கே­யுள்ள ஆறு­கள், நீர்­நி­லை­கள் ஆகி­யவை நிரம்பி வழி­வ­தால் சாலை­களும் வீடு­களும் நீரில் மூழ்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஆயி­ரத்­திற்கு மேற்­பட்­டோர் அங்­கி­ருந்து பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

நிர்­மல் நக­ரின் பல பகு­தி­களில் வெள்­ளத்­தில் மேலும் பலர் சிக்­கித் தவித்து வரு­கின்­ற­னர். அவர்­க­ளைக் கண்­டு­பி­டித்து மீட்­கும் பணி முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது.

தாழ்­வான மற்­றும் ஆற்­றங்­க­ரை­யோ­ரப் பகு­தி­களில் வாழும் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பெரிய அள­வில் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

கோதா­வரி மற்­றும் கிருஷ்ணா நதிக்­க­ரை­யோ­ரம் உள்ள தாழ்வு நிலங்­களில் வெள்­ளம் வர­லாம் என்று அம்­மா­நில அரசு, மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

தெலுங்­கானா மாநில மேம்­பாட்­டுத் திட்­டக் கழ­கத்­தின் தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் நேற்று முன்­தி­னம் வரை சாரங்­க­பூ­ரில் 15 செ.மீட்­ட­ரும் தெலுங்­கா­னா­வின் வடக்கு கிழக்கு வட்­டா­ரங்­களில் 20 செ.மீ. முதல் 25 செ.மீட்­டர் வரை மழை பெய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், அம்­மா­வட்ட நிர்­வாக அதி­கா­ரி­கள், நிர்­மல் மாவட்­டத்­தில் சினா­பூர் கிரா­மத்­தைத் தவிர மற்ற பகு­தி­களில் வெள்­ளம் கட்­டுக்­குள் இருப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர்.

இப்­ப­கு­தி­யில் ஏரா­ள­மா­னோர் மீட்­கப்­பட்ட நிலை­யில், சுமார் 70 பேர் வெள்­ளத்­தில் சிக்­கி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.