சக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் வந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

சக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் வந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

1 mins read
185077eb-f7d6-4798-a020-94d058fc3f68
-

ஜம்மு-காஷ்­மீர்: ஜம்மு பகு­தி­யில் உள்ள சம்பா அனைத்­து­லக எல்­லைப் பகு­தி­யில் நேற்று அதி­காலை சக்­தி­வாய்ந்த வெடி­பொ­ருட்­க­ளு­டன் வந்த ஆள் இல்லா விமா­னத்தை ராணு­வத்­தி­னர் சுட்டு வீழ்த்­தி­னர்.

அந்த விமா­னத்­தில் இருந்த சக்­தி­வாய்ந்த வெடி­பொ­ருட்­களை ராணு­வத்­தி­னர் கைப்­பற்­றி­யுள்­ள­னர்.

இது­கு­றித்து அதி­கா­ரி­கள் தரப்­பில் கூறி­ய­தா­வது:

சம்­பா­வின் கனா­சக் பகு­தி­யில் உள்ள அனைத்­து­லக எல்­லைப் பகு­தி­யில் ஆள் இல்லா விமா­னம் சுற்­றி­வ­ரு­வ­தா­கக் காவல்­துறை தந்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் அங்கு அதி­வி­ரை­வுப்­படை அனுப்பி வைக்­கப்­பட்­ட­தாக ராணுவ அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து அதி­வி­ரை­வுப்­படை அங்கு சென்று அந்த ஆள் இல்லா விமா­னத்­தைச் சுட்டு வீழ்த்­தி­னர்.

அந்த விமா­னம் ஐந்து கிலோ எடை கொண்ட சக்­தி­வாய்ந்த ஐஇடி வெடி­பொ­ருட்­க­ளைச் சுமந்து 8 கி.மீ. தொலைவு அனைத்­து­லக எல்­லைக்­குள் பறந்­து­வந்­துள்­ளது.

சுட்டு வீழ்த்­தப்­பட்ட அந்த விமா­னத்­தில் இருந்து கைப்­பற்­றப்­பட்ட வெடி­பொ­ருட்­கள் எந்த நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்­டது; எங்கு கொண்டு செல்­லப்­ப­ட­வி­ருந்­தது போன்ற விவ­ரங்­களை அறிய ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக ராணுவ அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இது லஷ்­கர்-இ-தொய்பா போன்ற தீவி­ர­வா­தி­க­ளின் சதிச்­செ­ய­லாக இருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

கடந்த ஜூன் 27ஆம் தேதி இதே­போன்று இரு ஆளில்லா குட்டி விமா­னம் மூலம் வீசப்­பட்ட வெடி­பொ­ருட்­க­ளால் ஜம்­மு­வில் விமா­னப்­படை வீரர்­கள் இரு­வர் படு­கா­ய­ம­டைந்­த­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.