கொற்கை அகழாய்வில் 2,800 ஆண்டு பழமையான ஏழடுக்கு செங்கல் கட்டுமானம்

தூத்­துக்­குடி: தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் ஆதிச்­ச­நல்­லூர், சிவ­களை மற்­றும் கொற்­கை­யில் தமி­ழக தொல்­லி­யல் துறை சார்­பில், அக­ழாய்வு பணி­கள்­ ந­டை­பெற்று வரு­கின்­றன.

கொற்­கை­யில் நடை­பெற்று வரும் அக­ழாய்­வுப் பணி­யில் பழ­மை­யான ஏழடுக்கு செங்­கல் கட்­டு­மா­னம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. கொற்­கை­யில் 75 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் கடந்த பிப்­ர­வரி 26ஆம் தேதி மீண்­டும் அக­ழாய்­வுப் பணி தொடங்­கி­யுள்­ளது.

கொற்கை ஊரின் மையப்­ப­கு­தி­யில் 17 குழி­கள் அமைக்­கப்­பட்டு, அக­ழாய்வு இயக்­கு­நர் தங்­க­துரை தலை­மை­யில் நான்கு மாத கால­மாக இப்­பணி தொடர்ந்து நடை­பெற்று வரு­கிறது.

இந்த அக­ழாய்வுப்ப­ணி­யில் பண்­டைய தமி­ழர்­க­ளின் நாக­ரி­கத்தை வெளிக்­கொ­ண­ரும் வகை­யில் பழ­மை­யான பொருட்­கள் பல­வற்றை ஆய்­வா­ளர்­கள் கண்­டு­பி­டித்து வரு­கின்­ற­னர். அவற்­றில் கடந்த வாரம், திர­வத்தை வடி­கட்­டும் நான்­க­டுக்­கு­க­ளைக் கொண்ட சுடு மண்­கு­ழாய் ஒன்றை அவர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர். இப்­போது, இன்­னொரு குழி­யில் இருந்து, ஏறக்­கு­றைய இரண்­டா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு, சங்க காலத்­தில் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நம்­பப்­படும் ஏழ­டுக்­குச் செங்­கல் கட்­டு­மா­னம் ஒன்­றைக் கண்­டு­பி­டித்­துள்­ள­னர். தொடர்ந்து அதே­கு­ழி­யில் இரும்பு, உருக்கு, கண்­ணாடி மணி­கள் மற்­றும் வாழ்­வி­டப் பகு­தி­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான அமைப்­பு­களும் காணப்­ப­டு­வ­தாக ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர். இங்கு செப்டம்பர் வரை ஆய்வு நடைபெறும்.

இதற்கு முன்­னர் சிவ­க­ளை­யில் இரண்டு கட்­டங்­க­ளாக நடை­பெற்ற அக­ழாய்­வின்­போது, ஏரா­ள­மான பழங்­கால முது­மக்­கள் தாழி­கள், மண்­பாண்­டங்­கள் உள்­ளிட்­டவை கண்­டெ­டுக்­கப்­பட்­டன. சிவ­களை பகு­தி­யில் மட்டும் இது­வரை 29 முது­மக்­கள் தாழி­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், சிவ­கங்கை மாவட்­டம் திருபு­வ­னம் அருகே கொந்­தகை அக­ழாய்­வில் அரு­க­ருகே முது­மக்­கள் தாழி, இறு­திச்­ச­டங்­குக்கு பயன்­ப­டுத்­திய பானை கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!