செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
eb2cfc7e-1b4d-4e53-8ccc-22ac3ce5ef84
-

மழைபெய்தும் மேட்­டூர் அணைக்கு நீர்­வ­ரத்து குறை­யும் நிலை

பெங்­க­ளூரு: கர்­நா­டகா மாநி­லத்­தின் குடகு மாவட்­டத்­தி­லும், கேரள மாநி­லத்­தின் வய­நாட்­டி­லும் கடந்த வாரத்­தில் கன­மழை பெய்­த­தால் காவிரி மற்­றும் கபிலா ஆகிய இரு ஆறு­களில் வெள்­ள­‌ப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது. கபிலா ஆற்­றில் தொடர்ந்து நீர்­வ­ரத்து அதி­க­ரித்­த­தால், மைசூரு மாவட்­டத்­தில் உள்ள கபினி அணை­யின் நீர்­மட்­டம் நேற்று 2283.80 அடி­யாக உயர்ந்­தது.

கிருஷ்ண ராஜ சாகர், கபினி ஆகிய அணை­களில் இருந்து தமி­ழ­கத்­துக்கு விநா­டிக்கு 5,000 கன அடி நீர் திறக்­கப்­பட்­டது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தமி­ழ­கத்­துக்கு 17,000 கன­அடி நீர் திறக்­கப்­பட்ட நிலை­யில், தற்­போது அதன் அளவு குறைக்­கப்­பட்­டுள்­ள­தால், மேட்­டூர் அணைக்கு நீர்­வ­ரத்து குறை­யும் நிலை ஏற்­பட்­டுள்­ள‌து.

குற்­றா­ல அரு­வி­களில்

நீர்வரத்து அதி­க­ரிப்பு

குற்­றா­லம்: தென்­காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மற்­றும் அணைப்­ப­கு­தி­யில் கடந்த சில நாட்­க­ளாகப் பெய்து வரும் கனமழை கார­ண­மாக குற்­றா­ல அரு­வி­க­ளில் நீர்வரத்து அதி­க­ரித்­துள்­ளது. வியாழக்கிழமை காலை குற்­றா­லத்­தில் குளிர்ந்த காற்­று­டன் சாரல் மழை பெய்­தது. ஐந்­த­ரு­வி­யின் ஐந்து கிளை­க­ளி­லும் தண்­ணீர் ஆர்ப்­ப­ரித்து கொட்­டி­யது. இதே­போல் புலி­ய­ருவி, பழைய குற்­றா­லத்­தி­லும் அதி­க­ளவு தண்­ணீர் வரு­கிறது. தென்­காசி மாவட்­டத்­தில் கட­னா­நதி, ராம­நதி அணை­க­ளில் தொடர்ந்து நீர்­வ­ரத்து அதி­க­ரித்­துள்­ளது. பாப­நா­சம் அணை நீர்­மட்­டம் நேற்று காலை நில­வ­ரப்­படி 108.95 அடி­யாக இருந்­தது.

பாம்பை விரட்ட பூனைக்­கா­வல்

புவ­னேஸ்­வர்: நல்ல பாம்­பு­கள் நட­மாட்­டம் அதி­க­முள்­ள­தால் வீட்­டுக்கு வெளியே காவ­லுக்கு தனது செல்­லப்­பூ­னையை நிறுத்தி வைத்­துள்­ளார் வீட்­டின் உரி­மை­யா­ளர். அவ­ரும் அவ­ரு­டைய குடும்­பத்­தி­ன­ரும் இர­வில் உறங்­கும்­போ­தும் வெளியே செல்­லும்­போ­தும் இந்­த ஒன்றரை வயது பூனை­தான் வீட்­டைக் காவல் காக்­கும். அடிக்­கடி வீட்­டுக்­குள் நுழைய முயற்சி செய்த ஒன்­ற­ரை­யடி நீள­முள்ள ஒரு நல்ல பாம்பை வீட்­டுக்­குள் நுழைய விடா­மல் தடுத்து, அந்­தப் பாம்பை எங்­கும் நக­ர­வி­டா­மல் காவ­லுக்கு நின்றது அந்­தப் பூனை. இந்­தச சம்­ப­வத்­தைக் காட்­டும் காணொளி ஒன்று சமூக ஊட­கங்­களில் பரவி வரு­கிறது. ஒடிசா மாநி­லத்­தின் புவ­னேஸ்­வர் என்ற ஊரில்­தான் இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது. பாம்­பென்­றால் படையே நடுங்­கும் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு குட்­டிப் பூனை துணிச்­ச­லு­டன் ஒரு நச்சுப்பாம்பை எங்­கும் நக­ர­வி­டா­மல் வாச­லி­லேயே தடுத்து சிறைப்­பி­டித்து வைத்­தி­ருந்த காட்­சி­யைக் காணொளியில் பார்த்து பல­ரும் வியந்து பாராட்டி வரு­கின்­ற­னர். கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் வரை பாம்பை, பூனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், பாம்பைப் பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளனர். "இந்தப் பூனையை நாங்கள் ஒரு விலங்காகப் பார்க்கவில்லை. இவனும் எங்கள் குடும்ப உறுப்பினர்தான் என்று," என்று பெருமையுடன் கூறுகிறார் அதன் உரிமையாளர் சம்பத் பரிடா.

வளர்ச்­சித் திட்­டங்­க­ளுக்கு நிதி பெற டெல்லி செல்­லும் அமைச்­சர்­கள்

புதுச்­சேரி: புதுச்­சே­ரி­யின் வளர்ச்­சித் திட்­டங்­க­ளுக்கு ஒப்­பு­தல் மற்­றும் நிதி பெறு­வ­தற்­கா­க­வும் புதுச்­சேரி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் அடுத்த வாரம் புது­டெல்லி செல்­ல­வி­ருப்­ப­தாக புதுச்­சேரி உள்­துறை அமைச்­சர் நமச்­சி­வா­யம் தெரி­வித்­துள்­ளார். என்.ஆர்.காங்­கி­ரஸ் - பாஜக கூட்­டணி சுமு­க­மாக இருந்து புதுச்­சே­ரி­யின் வளர்ச்­சித் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்த பாடு­ப­டு­வோம்.

ஊரக வளர்ச்­சி­யின் மூல­மாக அனைத்து மக்­க­ளை­யும் பொரு­ளி­யல் ரீதி­யாக மேம்­ப­டுத்­து­வ­தற்­கான பல திட்­டங்­கள் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.