வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை ஏற்படுத்த தமிழக அரசு ஆர்வம்

1 mins read
79a17ba8-6aaf-4776-8fcf-3ef1145950f2
-

சென்னை: சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் பொது மற்­றும் மறு­வாழ்­வுத்­து­றை­யின் வாயி­லாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பல்­வேறு பணி­க­ளின் செயல்­பா­டு­கள் குறித்த ஆய்­வுக் கூட்­டம் நடை­பெற்­றது. அதில் பங்­கேற்­றுப் பேசிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், வெளி­நா­டு­வாழ் தமி­ழர்­க­ளின் நலன் காத்­தி­ட­வும் நாடு திரும்­பும் தமி­ழர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­திற்கு துணை­நிற்­க­வும் வெளி­நா­டு­வாழ் தமி­ழர்­கள் நலத்­துறை எனும் புதிய துறையை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். வெளி­நா­டு­வாழ் தமி­ழர்­கள் நல­வா­ரி­யம் அமைப்­ப­தற்­கும் உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்­டும்," என்று அதி­கா­ரி­க­ளி­டம் கூறி­னார்.