21 மாவட்டங்களில் கிருமித் தொற்று உயிரிழப்பு இல்லை

சென்னை: தமி­ழ­கத்­தின் கொரோனா தொற்று நில­வ­ரத்தை சுகா­தா­ரத் துறை வெளி­யிட்­டுள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை மாநி­லம் முழு­வ­தும் 1,830 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தா­க­வும் 24 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­ன­தா­க­வும் அது தெரி­வித்­தது.

புதி­தாக தொற்று உறுதி செய்­யப்­பட்­டோ­ரில் அதி­க­பட்­ச­மாக கோவை­யில் 177 பேரும் ஈரோட்­டில் 135 பேரும் சென்­னை­யில் 130 பேரும் அடங்­கு­வர். இதன்­மூ­லம் மாநி­லத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் இது­வரை பாதிக்­கப்­பட்­ட­வா்­க­ளின் எண்­ணிக்கை 25 லட்­சத்து 44,870 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

மேலும் 24 போ் பலி­யா­னதை அடுத்து மாநி­லம் முழு­வ­தும் இது­வரை கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­தோ­ரின் எண்­ணிக்கை 33,862ஆக அதி­க­ரித்­துள்­ளது.

சென்னை, மதுரை, திருச்சி, திருப்­பூர் உள்­ளிட்ட 21 மாவட்­டங்­களில் கொரோனா தொற்­றால் யாரும் உயி­ரி­ழக்­க­வில்லை என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வெள்­ளிக்­கி­ழமை 2,516 பேர் கொரோனா கிருமித்தொற்­றி­லி­ருந்து

குண­ம­டைந்து வீடுதிரும்­பி­ய­தைத் தொடர்ந்து குண­ம­டைந்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 24,86,192ஆக அதி­க­ரித்­தது.

மேலும், மாநி­லம் முழு­வ­தும் 24,816 பேர் சிகிச்சை பெற்று வரு­வ­தாக சுகா­தா­ரத் துறை தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!