வெறுப்பூட்டும் கருத்து: கைதான பாதிரியார் மீது ஏழு வழக்குகள்

மதுரை: கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் அரு­ம­னை­யில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (ஜூலை 18) 'சிறு­பான்­மை­யி­ன­ரின் உரிமை மீட்பு' கூட்­டத்­தில் ஜன­நா­யக கிறிஸ்­த­வப் பேர­வை­யைச் சேர்ந்த ஜார்ஜ் பொன்­னையா என்ற பாதி­ரி­யார் பேசி­னார்.

அப்­போது அவர் பிர­த­மர் மோடி, மத்திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா, கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தைச் சேர்ந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆகி­யோர் குறித்து வெறுப்பை வெளிப்­ப­டுத்­தும் வகை­யில் பேசி­ய­தாக புகார்­கள் அளிக்­கப்­பட்­டன.

சட்­ட­மன்­றத் தேர்­த­லில் திமுக வெற்றி பெற்­றது குறித்­தும் சமய அடிப்­ப­டை­யில் சர்ச்­சைக்­கு­ரிய சில கருத்­து­களை அவர் வெளியிட் ­டி­ருந்­தார்.

அவ­ரு­டைய இந்­தப் பேச்சு சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­ன­தும் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யது. புகார்­க­ளின் பேரில் அரு­மனை போலி­சார் வழக்­குப் பதிவு செய்து ஜார்ஜ் பொன்­னை­யா­வைத் தேடி­னர்.

அத­னைக் கேள்­விப்­பட்­ட­தும் அவர் தலை­ம­றை­வா­னார். அவ­ரைப் பிடிக்க ஐந்து தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்­டன. இந்­நி­லை­யில் மதுரை மாவட்­டம் கள்­ளிக்­கு­டி­யில் நேற்று ஜார்ஜ் பொன்­னையா கைது செய்­யப்­பட்­டார். அவர் மீது ஏழு பிரி­வு­களில் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!