நீர்நிலைகளில் பல ஆயிரம் டன் குப்பை

நீர்நிலைகளில் பல ஆயிரம் டன் குப்பை

1 mins read
a9a5af9c-c330-4265-a154-bf69864dd6bd
-

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் மழைநீா் வடிகால் துறை யின் சார்பில் 48.80 கி.மீ. நீள முள்ள 30 நீா்வழி கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீா் நிலைகளில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளும் கழிவுகளும் மாநகராட்சியின் இயந்திரப் பொறி யியல் துறை வெளிநாடுகளிலி ருந்து தருவித்த அதிநவீன இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்பட்டு வருகின்றன. ஜூன் மாதமும் இம்மாதமும் 30 நீா்வழி கால்வாய்களில் படிந்திருந்த 6,189 மெட்ரிக் டன் கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரைகள் நவீன இயந்திரங்கள் மூலம் அகற்றப் பட்டதாக மாநகராட்சி அறிக்கை தெரிவிக்கிறது.