சென்னை: காவல்துறையினர் தங்கள் சொந்தக் காரணங்களுக்காக அரசுப் பேருந்தில் செல்லும்போது பயணச்சீட்டு வாங்க வேண்டுமென தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு அவர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், "கைதிகளை அழைத்துச் செல்லுதல், கைதாணை தொடர்பான பணிகள், காவல்துறை சார்ந்த பணி களைத் தவிர சொந்தக் காரணங்களுக்காகப் பேருந்தில் செல்லும்போது காவல்துறையினர் பயணச்சீட்டு பெறவேண்டும். இது முறையாக நடைபெறுகிறதா என அதிகாரிகள் கண்காணித்து, விதிமுறைகளைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்," என கூறியுள்ளார்.

