செய்திக்கொத்து

நூலகங்கள் திறப்பு; சிறுவர், முதியோருக்கு அனுமதி இல்லை

சென்னை: தமிழகத்தில் 75 நாட்களுக்குப் பிறகு நேற்று நூலகங்கள் திறக்கப்பட்டன. முன்னதாக, மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களைத் திறக்க பொதுநூலக இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். போட்டித் தேர்வுகள் நெருங்கிவரும் நிலையில் நூலகங்களைத் திறக்க வேண்டும் என ஏராளமானோர் கோரிக்கை வைத்ததை அடுத்து அவர் அந்த உத்தரவைப் பிறப்பித்தார். கொரோனா கட்டுப்பாட்டு மண்ட லங்களில் உள்ள வாசகர்களுக்கு நூலகத்தைப் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதேபோல் 15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறார்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் செல்ல அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா செல்ல போலி கொரோனா சான்றிதழ்: நால்வர் கைது

கம்பம்: கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தொற்று இல்லை (நெகட்டிவ்) சான்றிதழ் வைத்திருப்போர் மட்டும் கேரளா வுக்குள் அத்தியாவசியத் தேவைகளுக்காக அனுமதிக்கப்படு கின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளை யத்தைச் சேர்ந்த சதீஸ்குமார், முருகன் ஆகியோர் கொரோனா 'நெகட்டிவ்' சான்றிதழுடன் கம்பம் மெட்டு வழி யாக கேரளா செல்ல முயன்றனர். அங்கிருந்த போலிசார், சான்றிதழைச் சரிபார்த்தபோது அது போலி எனத் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கம்பத்தைச் சேர்ந்த விஜயகுமார், பண்ணைப்புரத்தைச் சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்தது தெரிய வந்தது. இந்த இருவரையும் கேரள போலிசார் வந்து கைது செய்தனர். போலி சான்றிதழ் தயாரித்து கொடுக்க வைத்தி ருந்த கணினி மற்றும் கைபேசிகளை இவர்களிடமிருந்து போலிசார் பறிமுதல் செய்தனர்.

ஜெயலலிதா மரண விசாரணை: மேலும் ஆறு மாதம் அவகாசம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017 செப்டம்பர் 25ல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அப்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டது. விசாரணை 90 விழுக்காடு முடிவுற்ற நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், 10வது முறையாக அளிக்கப் பட்ட ஆறு மாத அவகாசம் நேற்று ஜூலை 24ஆம் தேதி யுடன் முடிவடைந்தது. ஆறுமுகசாமி ஆணையம் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து மேலும் ஆறு மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!