தமிழக சுற்றுலாவுக்கு முன்பதிவு தொடங்கியது

தமிழக சுற்றுலாவுக்கு முன்பதிவு தொடங்கியது

1 mins read
1d50899f-5915-41f3-a05a-21f871d37baf
-

சென்னை: தமி­ழ­கத்­தில் சுற்­றுலா தலங்­க­ளுக்கு பய­ணி­களை அழைத்­துச் செல்­வ­தற்­கான முன் பதிவை தமிழ்­நாடு சுற்­றுலா வளர்ச்சிக் கழ­கம் தொடங்­கி­யுள்­ளது. சுற்­றுலாத் துறை­யின் கீழ் செயல்­படும் தமிழ்­நாடு சுற்­றுலா வளர்ச்சிக் கழ­கம், பல்­வேறு சுற்­றுலாத் திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கிறது.

கிருமித்தொற்று அதிகரித்த தன் கார­ண­மாக சுற்­றுலா பயணி களை சுற்­றுலா தலங்­க­ளுக்கு அழைத்துச் செல்­வதை கழகம் நிறுத்தி வைத்­தி­ருந்­தது.

தற்­போது கொரோனா தாக்­கம் குறைந்­துள்­ள­தா­லும் ஊர­டங்­கில் அரசு தளர்­வு­களை அறி­வித்து உள்­ள­தா­லும் தமிழ்­நாடு சுற்­றுலா வளர்ச்சி கழ­கம் சுற்­றுலா திட்­டங்­களை மீண்­டும் தொடங்க முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஒரு நாள் சக்தி பய­ணம்; ஐந்து நாட்­கள், 108 அம்­மன் கோவில் பய­ணம்; மூன்று நாட்­கள் ஆடி அமா­வாசை ராமேஸ்­வ­ரம் பய­ணம் ஆகி­ய­வற்­றுக்கு முன்­ப­திவு துவக்கப்பட்­டுள்­ளது.

இதற்கு, www.ttdconline.com என்ற இணை­யத்­த­ளம் வாயி­லாக முன்­ப­திவு செய்­ய­லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் சக்தி பய­ணத்­திற்கு நப­ருக்கு 850 ரூபாய்; ஐந்து நாட்­கள், 108 அம்­மன் கோவில் சுற்று­லாவுக்கு தனி நப­ருக்கு 12,500 ரூபாய், அறையை பகிர்ந்துகொள்­ளும் இரு­வ­ருக்கு 9,500 ரூபாய், குழந்­தைக்கு 8,000 ரூபாய்; மூன்று நாட்­கள் ஆடி அமா­வாசை சுற்­று­லா­வில் தனி நப­ருக்கு 6,500 ரூபாய், அறையை பகிர்ந்து கொள்­ப­வர்­க­ளுக்கு 5,500 ரூபாய் என கட்­ட­ணம் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இவை தவிர இதர சுற்றுலாவுக்கும் கழகம் ஏற்பாடு செய்து வருகிறது.