மேல்சபை அமைக்க முயற்சி

மேல்சபை அமைக்க முயற்சி

2 mins read
8cf5ef50-1ec3-40e4-b13a-1ff1b31b5b1c
-

சென்னை: தமி­ழக சட்­ட­சபை நுாற்றாண்டு விழா­வை­யொட்டி மேல்­ச­பையை மீண்­டும் கொண்டு வரு­வ­தற்­கு­ரிய முயற்­சி­யில் அரசு தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­வ­தாக தமி­ழக ஊட­க­மான தின­ம­லர் தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

முதல்­வர் ஸ்டா­லின் தலை­மை­யி­லான அமைச்­ச­ரவை இது குறித்து முடிவு எடுத்து வர­வு ­செ­ல­வுக் கூட்­டத் தொட­ரில் தீர்­மா­னம் நிறை­வேற்ற வாய்ப்பு உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

தமி­ழக சட்­ட­சபை நுாற்றாண்டு விழா அடுத்த மாதம் 2ஆம் தேதி அதி­பர் ராம்­நாத் கோவிந்த் தலை­மை­யில் சென்­னை­யில் கொண்­டா­டப்­பட உள்­ளது.

இதற்­காக டெல்­லி­யில் அவ­ரைச் சந்­தித்து முதல்­வர் ஸ்டா­லின் அழைப்பு விடுத்­துள்­ளார்.

இதை­ய­டுத்து அதி­பர் ராம்­நாத் கோவிந்த் தமி­ழ­கம் வரு­கி­றார்.

அதை­யொட்டி சட்­ட­ச­பை­யில் முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நிதி படம் திறப்பு, மது­ரை­யில் கரு­ணா­நிதி நுாலகத்­திற்­கான அடிக்­கல் நாட்­டு­தல் உள்­ளிட்ட பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து வரவு செல­வுத் திட்ட கூட்­டத் தொட­ரும் தொடங்கு­ கிறது.

அந்த சம­யத்­தில் மேல்­சபை அமைப்­ப­தற்­கான தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னால் பொருத்­த­மாக இருக்­கும் என அரசு தரப்­பில் கரு­தப் ­ப­டு­கிறது.

அதற்கு முன் முதல்­வர் ஸ்டா­லின் தலை­மை­யில் அமைச்­ச­ரவை கூடி அதில் மேல்­ச­பையை மீண்­டும் கொண்டு வரு­வ­தற்கு ஒப்­பு­தல் பெறப்­படும் என்று தின­ம­லர் கோடி காட்டியது.

அமைச்­ச­ரவை கூட்­டத்­தில் எடுக்­கப்­படும் முடி­வின்­படி பட்­ஜெட் கூட்­டத் தொட­ரில் சட்­ட­ச­பை­யில் ஒரு­ம­ன­தாக தீர்­மா­னம் நிறை­வேற்­ற­வும் அரசு தரப்­பில் ஆலோ­சிக்­கப்­பட்டு உள்­ளது.

திமுக தனது தேர்­தல் அறிக்­கை­யில் சட்ட மேல்­சபை உரு­வாக்­கப்­படும் என அறி­வித்­தி­ருந்­தது. தேர்­தல் வாக்­கு­று­தியை நிறை­வேற்ற முதல்­வர் ஸ்டா­லின் விரும்­பு­கி­றார் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரிகள் கூறினர்.

1989ல் திமுக ஆட்­சி­யின்­போது அப்­போ­தைய முதல்­வர் கரு­ணா­நிதி முன்­னி­லை­யில் மேல்­ச­பைக்­கான தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டது. விடு­த­லைப் புலி­கள் விவ­கா­ரம் தொடர்­பாக திமுக ஆட்சி கலைக்­கப்­பட்­ட­தால் அத்­தீர்­மா­னம் நிறை­வே­ற­வில்லை. 2006ல் திமுக ஆட்­சி­யில் சட்­ட­ச­பை­யில் அந்­தத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. மத்­தி­யில் கூட்­டணி கட்­சி­யான காங்­கி­ரஸ் அரசு இருந்­த­தால், லோக்­சபா, ராஜ்­ய­சபா என இரண்டு சபை­க­ளி­லும் அந்த தீர்­மா­னத்­திற்கு ஒப்­பு­தல் கிடைத்­தது. அதி­பர் ஒப்­பு­த­லுக்­குப் பிறகு மேல்­சபை அமைக்­கும் பணி தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஆனால், 2011ஆம் ஆண்டு சட்­ட­சபை தேர்­த­லில் அதி­முக வெற்றி பெற்று ஆட்­சிக்கு வந்­த­தால் மேல்­சபை தீர்­மா­னத்தை அப்­போ­தைய முதல்­வர் ஜெய­ல­லிதா ரத்து செய்­தார்.

தற்­போது கரு­ணா­நிதி கனவை முதல்­வர் ஸ்டா­லின் நன­வாக்­கும் வகை­யில் வரவு செல­வுக் கூட்­டத் தொட­ரில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்டு, லோக்­சபா, ராஜ்­ய­சபா என இரு சபை­க­ளின் ஒப்­பு­த­லுக்கு அனுப்பி வைக்­கப்­பட உள்­ளது.

அடுத்த குளிர்­கால கூட்­டத் தொட­ரில் இரு சபை­க­ளி­லும் தீர்­மா­னம் நிறை­வேறி அதி­பர் ஒப்­பு­தல் கிடைத்­த­தும் அடுத்த ஆண்டு மேல்­சபை அமைய வாய்ப்புள்­ளது.