கோயில் திருத்தேர்களின் பழுதை நீக்கவும், குடமுழுக்குப் பணிகளுக்கும் ரூ.100 கோடி ஒதுக்கீடு

திருப்­பூர்: தமி­ழ­கத்­தில் உள்ள கோயில்­க­ளின் பல்­வேறு பணி­ களுக்­காக ரூ.100 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக இந்து சமய அற­நிலையத் துறை அமைச்­சர் சேகர்­பாபு தெரி­வித்­துள்­ளார்.

சென்ற சனிக்கிழமை அன்று திருப்­பூர் மாவட்­டத்­தில் உள்ள கோவில்­களை ஆய்வு செய்த அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

“தமி­ழ­கத்­தில் கோவில்­கள் அனைத்தையும் தூய்மை நிறைந்த இட­மாக மாற்­ற­வும் நந்­த­வ­னம், திருத்­தேர் பழு­த­டைந்­தால் அவற்றை சரி செய்­ய­வும், கோவில் தெப்­பக்­கு­ளங்­களில் தண்­ணீர் விடு­வ­தற்­கும் முயற்­சி­கள் எடுக்­கப்­படும்.

“கும்­பா­பி­ஷே­கம் நடத்த வேண்­டிய கோவில்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது. முதல்­கட்­ட­மாக இதற்­காக ரூ.100 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள­து” என்று அமைச்சர் கூறி­னார்.

“அந்தப் பணி­களை முடுக்கி விடு­வ­தற்­காக மாவட்­டந்­தோ­றும் ஆய்வு நடக்­கிறது. எந்த காலத்­தி­லும் இல்­லாத அள­வுக்கு வரு­மா­னம் தரக்­கூ­டிய கோவில்­கள், வரு­மா­னம் இல்­லாத கோவில்­கள் என்ற நிலையை மாற்றி அனைத்து கோவில்­க­ளி­லும் ஒரு கால பூஜை நடத்­தப்­பட வேண்­டும் என்று முதல்­வர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

“அதன்­படி இந்த ஆண்டு மிகப்­பெ­ரிய அள­வில் கோவில்­களில் கும்­பா­பி­ஷே­கம் மற்­றும் பணி­கள் நடை­பெ­றும். மு.க.ஸ்டா­லின் தலை­மை­யி­லான ஆட்சி என்­பது ஆன்­மிக மக்­க­ளுக்கு பொற்­கால ஆட்சியாக என்றும் இருக்­கும் அள­வுக்கு இந்து சமய அற­நி­லை­யத்­துறை பணி­கள் நடக்­கும்,” என்று அமைச்­சர் சேகர்­பாபு மேலும் கூறி­னார்.

கோவில் நிலங்­கள் குறித்து தின­மும் இரண்டு இடங்­க­ளி­லா­வது ஆக்­கி­ர­மிப்­பு­களை இந்து சமய அற­நி­லை­யத் துறை­யி­னர் அகற்றி வரு­ வ­தா­கக் கூறிய அவர், கடந்த 75 நாட்­களில் இது­வரை இல்­லாத அள­வுக்கு அதி­கப்­ப­டி­யான இடங்­கள் ஆக்­கி­ர­மிப்­பிலிருந்து மீட்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!