'டாஸ்மாக்' ஊழியர்கள் மனு

1 mins read
593f832e-b0ec-4cd9-a53c-9e1fd3d28101
-

சென்னை: 'டாஸ்மாக்' ஊழியர் களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனை யாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக சங்க நிர் வாகிகள் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

'டாஸ்மாக்' ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இஎஸ்ஐயை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கடந்த 2019ல் நடத்தப்பட்ட சிறப்புத் தேர்வு வழியே 500 மேற்பார்வையாளர்கள், இளநிலை உதவியாளர்களாக தேர்வு செய்யப் பட்டனர்.

காலியான இடங்களில், தகுதியுள்ள விற்பனையாளர்களை மேற்பார்வையாளர் ஆகவும், உதவி விற்பனையாளர்களை விற்பனை யாளர்களாகவும் பணியமர்த்த வேண்டும்.

பணியாளர்களுக்கு விருப்பத் தின் அடிப்படையில் பணி மாறுதல் வழங்க வேண்டும்.

கொரோனா நோய்த் தொற்றால், மரணமடைந்த அனைத்து பணி யாளர்களுக்கும், அரசின் சிறப்பு நிவாரணத் தொகை 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப் படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் என்று மனுவில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனை யாளர்கள் நலச் சங்கம் கேட்டுக் கொண்டது.