கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்

1 mins read
023c40c9-8e7c-45fa-94fa-d6742d0d2dec
யாஷிகா ஆனந்த் பயணம் செய்த கார் உருத்தெரியாமல் நசுங்கிக் கிடக்கிறது.இதில் பயணம் செய்த யாஷிகா ஆனந்தின் தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.படம்: தினத்தந்தி(இடம்) யாஷிகா ஆனந்த்.கோப்புப் படம் -
multi-img1 of 2

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்­தில் சிக்கி படு­கா­யம் அடைந்­துள்­ளார். அவ­ருக்கு தற்­போது மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

தமிழ் சினி­மா­வில் இளம் நடி­கை­யாக வலம் வரு­ப­வர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் மிக­வும் பிர­ப­ல­மா­னார்.

இவர் தனது நண்­பர்­க­ளு­டன் நள்­ளி­ர­வில் காரில் பய­ணம் செய்­துள்­ளார்.

மாமல்­ல­பு­ரம் அருகே உள்ள சூளே­ரிக்­காடு பகு­தி­யில் சென்­ற­போது அவரது கார் விபத்­தில் சிக்­கி­யது.

இதில் நடிகை யாஷிகா ஆனந்த் படு­கா­யம் அடைந்­துள்­ளார்.

யாஷி­கா­வின் தோழி வள்­ளிச்­செட்டி பவணி (28) என்­ப­வர் சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார்.

மேலும் இரண்டு நண்­பர்­கள் மற்­றும் யாஷிகா ஆனந்த் ஆகி­யோர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்த விபத்து குறித்து போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.