ஒருபுறம் குறையும் கிருமிப் பரவல்; மறுபுறம் அதிகரிப்பு

ஒருபுறம் குறையும் கிருமிப் பரவல்; மறுபுறம் அதிகரிப்பு

2 mins read
68234051-4131-45ab-b793-baa74b94fcfd
-

கோவை: தமி­ழ­கத்­தில் ஒட்டுமொத்த மாக உள்ள 38 மாவட்டங்களிலும் கொவிட்-19 கிருமிப் பர­வல் படிப்­படி­யா­கத் தணிந்து வருகிறது. இருப்பினும், 11 மாவட்­டங்­களில் மட்­டும் அன்­றா­டப் பாதிப்பு சற்று அதி­க­ரித்­துள்­ளதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன.

கோவை, ஈரோடு, சென்னை, சேலம் ஆகிய நான்கு மாவட்­டங்­களில் இப்பாதிப்பு 100 பேருக்கும் மேலாக பதி­வாகி உள்­ளது.

மாநி­லத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் 1,808 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதன்­மூ­லம் தமி­ழ­கத்­தில் தொற்றால் பாதிக்­கப்­பட்டோரின் மொத்த எண்­ணிக்கை 25 லட்­சத்து 48 ஆயி­ரத்து 497 ஆக அதி­க­ரித்­து உள்­ளது.

அதே­வே­ளை­யில், ஒரே நாளில் தொற்­றில் இருந்து குண­ம­டைந்து 2,447 பேர் வீடு திரும்­பினர். இது­வரை 24 லட்­சத்து 91 ஆயி­ரத்து 222 பேர் குண­மா­கி­யுள்­ள­னர்.

இது­கு­றித்து சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்­டுள்ள அறிக்கையில், "தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் 144,219 பேரிடம் பரிசோ தனை செய்ததில் 1,808 பேருக்கு கிருமி பாதிப்பு உறு­தி­யா­னது.

"அத்­து­டன் ஞாயி­றன்று 22 பேர் உயி­ரி­ழந்த நிலை­யில் கொரோ­னா­வால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 33,911 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

"ஒரே­நா­ளில் கோவை­யில் 169, ஈரோட்­டில் 130, சென்­னை­யில் 126, சேலத்­தில் 105, செங்­கல்­பட்­டில் 99, தஞ்­சா­வூர், கட­லூர், திண்­டுக்­கல், கள்­ளக்­குறிச்சி உள்­ளிட்ட 11 மாவட்­டங்­களில் கிருமி பாதிப்பு சற்று அதி­க­ரித்­துக் காணப்பட்டது.

"குறைந்தபட்­ச­மாக பெரம்பலூ ரில் ஆறு பேர் மட்­டுமே தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

"தமிழ்­நாடு முழு­வ­தும் கொரோ­னா­வுக்கு சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 23,364ஆக குறைந்­துள்­ள­து," என்று குறிப்பிட்டுள்­ளது.

இதற்­கி­டையே, விரை­வில் கொரோனா இரண்டாவது அலை யின் தாக்கம் ஒரு முடி­வுக்கு வரும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில், கிருமித் தடுப்பு நட­வ­டிக்­கை­களைப் பின்­பற்றாவிட்­டால் மூன்­றா­வது அலையை எதிர்­கொள்ள நேரி­டும் என மருத்துவ நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்ளனர்.

அனை­வ­ரும் தடுப்­பூசி செலுத்­திக்­கொள்­வதே அடுத்­த­டுத்த அலை­க­ளின் பாதிப்­பில் இருந்து தப்­பிப்­ப­தற்­கான சிறந்த வழி­யாக அமையும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்­துவமனை இயக்­கு­நர் டாக்­டர் ரன்­தீப் குலே­ரியாவும் பொது மக்களை எச்சரித்துள்ளார்.