நிதி அமைச்சர்: லாட்டரி சீட்டுகள் விற்கப்படாது

1 mins read
2bc79d0c-0247-4ae4-ac22-7e5e111b49a3
-

சென்னை: தமி­ழ­கத்­தின் நிதி நிலை­மை­யைச் சரிப்­ப­டுத்த நாங்­கள் தீர்க்­க­மா­கச் சிந்­தித்து வரு­வது உண்­மை­தான். எனி­னும், மீண்­டும் லாட்­ட­ரிச் சீட்டு விற்­ப­னையை அம­லுக்கு கொண்டு வரும் திட்­டம் எங்­கள் சிந்­தனை வட்­டத்­துக்­குள் இல்லை என்று நிதி அமைச்­சர் பி.டி.ஆர். பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் உறு­தி­பட தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் ஏற்­கெ­னவே லாட்­டரி விற்­பனை தடை செய்­யப் பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், மீண்­டும் லாட்­டரி விற்­ப­னை­யைக் கொண்டு வர தமி­ழக அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தாக எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தார்.

இது­கு­றித்து விளக்­கம் அளித்து உள்ள நிதி அமைச்­சர், "லாட்­ட­ரிச் சீட்டை மீண்­டும் திமுக அரசு கொண்­டு­வர முயற்சி செய்ய வேண்­டாம் என்று உண்­மைக்­குப் புறம்­பான ஓர் அறிக்­கையை வெளி யிட்­டி­ருக்­கும் பழ­னி­சா­மிக்கு எனது கண்­ட­னத்­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். அதி­முக அரசு சீர­ழித்த நிதி நிலை­மை­யைச் சரி செய்­யும் நெருக்­கடி இப்­போ­தைய அர­சுக்கு இருந்­தா­லும் நிதி ஆதா­ரத்­தைப் பெருக்­கும் வழி­களில் லாட்­டரி பற்­றிய சிந்­த­னையே அர­சுக்கு இல்லை," எனக் கூறி­யுள்­ளார்.