புதுடெல்லி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று காலை நேரில் சந்தித்துப் பேசினர்.
நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும், "தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்கவேண்டும். மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது. இந்த அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் இடுகாடாக மாறி விடும் எனத் தெரிவித்தோம்.
"கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவேண்டும் எனக் கோரியுள் ளோம். இலங்கை கடற்படையின ரால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். அதிமுக மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை," என்று கூறினர்.
சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவருமே மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

