கரூர்: மருத்துவமனையில் இருந்து தனது வீட்டுக்கு யாருக்கும் தெரி யாமல் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி குப்பிகளைத் திருடிச்சென்ற மகப்பேறு உதவியாளர் தனலெட்சுமியின் வீட்டில் இருந்து 95 தடுப்பூசி குப்பிகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
இதையடுத்து, தனலட்சுமியை பணி இடைநீக்கம் செய்து கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டார். "எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில் போலிசில் புகார் தரப்பட்டு, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி எடுத்துச் செல்லப்பட்ட விதம் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.
திண்டுக்கல் மாவட்டம், வேட சந்தூர் அருகில் வசித்து வரும் தனலட்சுமி, 58, கரூரில் உள்ள கஸ்தூரிபாய் தாய்-சேய் நல மையத்தில் அரசு மகப்பேறு உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.
அங்கிருந்து தடுப்பூசிகளை திருடிச்ெசன்ற தனலட்சுமி, தனது வீட்டில் வைத்து உறவினர்களுக்கும் அக்கம்பக்கத்தில் வசிப்போருக்கும் தடுப்பூசி போட்டதாக விசாரணையில் கூறினார்.
"வீட்டில் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போட முதலில் எடுத்து வந்தேன். பின்னர், கிராம மக்கள் கேட்டதால் அதிகம் எடுத்து வந் தேன். தவறுதான்," என்றார்.

