ஆறு ஆட்டோ அவசர சிகிச்சை வாகனங்களை வழங்கிய சமூக ஆர்வலருக்கு பிரதமர் பாராட்டு

ஆறு ஆட்டோ அவசர சிகிச்சை வாகனங்களை வழங்கிய சமூக ஆர்வலருக்கு பிரதமர் பாராட்டு

1 mins read
5b0bb557-3271-421b-9619-3dee2c6bc213
நீலகிரி மக்களுக்கு வழங்கிய ஆறு ஆட்டோ அவ­சர சிகிச்சை வாக­னங்­களில் ஒன்றின் அருகில் சமூக ஆர்­வ­லர் ராதிகா சாஸ்­திரி.படம்: தமிழக ஊடகம் -

நீலகிரி: குன்­னுார் வண்­டிச்­சோ­லை­யைச் சேர்ந்த ராதிகா சாஸ்­திரி என்ற சமூக ஆர்­வ­ல­ரின் முயற்­சி­யால் நீல­கிரி மாவட்ட மக்­கள் அவ­சர சிகிச்சை வாகன வச­தி­யைப் பெற்று வரு­கின்­ற­னர்.

ரூ.21 லட்­சம் செல­வில் தயாரான ஆறு ஆட்டோ அவ­சர சிகிச்சை வாக­னங்­களை கடந்த 4ஆம் தேதி நீல­கி­ரி­யில் முதல்­முறை­யாக ராதிகா அறி­மு­கம் செய்து வைத்தார்.

பல்­வேறு தன்­னார்வ அமைப்பு ­க­ளுக்­கும் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் அன்­பளிப்­பாக வழங்குவதற்­காக 470 சிசி திறன் கொண்ட பஜாஜ் மாக்­சிமா வண்­டி­கள் அவ­சர சிகிச்சை வாக­னங்­க­ளாக மாற்றி அமைக்­கப்­பட்­டன. இ­தில் முத­லு­தவி சிகிச்சை அளிக்­கும் வசதி, படுக்கை வசதி, உதவி­யா­ளர் இருக்கை, உயிர்­வாயு உருளை உள்­ளிட்ட வச­தி­கள் உள்­ளன.

இது­கு­றித்து ராதிகா கூறு­கை­யில், "நீல­கிரி கிரா­மங்­களில் மிக­வும் குறு­க­லான சாலை­களில் இந்த அவ­சர சிகிச்சை வாக­னங்­கள் சென்று வரு­வது மிக­வும் பயன் தருகிறது. இந்­நி­லை­யில், பிர­த­மரின் பாராட்டும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏழை எளிய மக்­க­ளுக்குச் சேவை செய்­வ­தும் மனநிறைவு தருகிறது," என்­றார்.

ஒவ்­வொரு ஞாயிறு அன்றும் 'மன­தின் குரல்' என்ற வாெனாலி நிகழ்ச்சி மூலம் சமூக சேவை­களைச் செய்து வரு­ப­வர்­க­ளுக்கு வாழ்த்தி, பாராட்­டுகளைத் தெரி­வித்து வரும் பிர­த­மர் மோடி, இப்போது ராதிகா சாஸ்திரியையும் பாராட்டி இருந்தார்.