'கறுப்புப் பூஞ்சை பாதித்தோரில் 80% நீரிழிவு நோயாளிகள்'

'கறுப்புப் பூஞ்சை பாதித்தோரில் 80% நீரிழிவு நோயாளிகள்'

2 mins read
c4790143-1afd-4dae-a9fa-99155e0f28e0
கறுப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளியின் கண்களை மருத்துவர் சோதிக்கிறார். கண் சிவப்பாக மாறுவது, கண்ணைச் சுற்றி வீக்கம், கண்வலி ஏற்படுவது அறிகுறிகளாகும். படம்: ஊடகம் -

கோவை: தமி­ழ­கத்­தில் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை ஒரு­பு­றம் குறை­யத் தொடங்­கி­யுள்ள நிலை­யில், மற்­றொ­ரு­பு­றம் கறுப்­புப் பூஞ்சை எனும் மியூ­கார்­மை­கோ­ஸிஸ் தொற்­றால் நீரி­ழிவு நோயா­ளி­கள் அதி­கம் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

கோவை அரசு மருத்­து­வ­மனை யில் கறுப்­புப் பூஞ்சை தொற்று கார­ண­மாக சிகிச்சை எடுத்­துக் கொண்­டோ­ரில் 80% பேர் நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் என இம்­ம­ருத்­து­வ­ம­னை­யின் தலைமை மருத்­து­வர் நிர்­மலா கூறி­யுள்­ளார்.

கொரோனா கிருமி பாதிப்பு கார ணமாக அதிக நாள்­கள் சிகிச்சை பெற்­ற­வர்­கள், நோய் எதிர்ப்­புச் சக்தி குறைந்­த­வர்­கள், கட்­டுப்­பா­டற்ற நீரி­ழிவு அறி­குறி உள்­ள­வர்­கள், எச்­ஐவி தொற்­றால் பாதிக்­கப்­பட்ட வர்­கள், ரத்­தப் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் உள்­ளிட்டோ ருக்கு இந்­தக் கறுப்­புப் பூஞ்சை பாதிப்பு ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­முள்­ள­தாக மருத்­து­வத்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கோவை­யில் நேற்­று­முன்­தி­னம் வரை 433 பேர் கறுப்­புப் பூஞ்­சை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­களில், கோவை அரசு மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­களில் 80% நோயா­ளி­க­ளுக்கு நீரி­ழிவு இருப்­பது தெரி­ய­வந்தது. ­ இது­கு­றித்து தலைமை மருத்து வர் நிர்­மலா கூறு­கை­யில், "கோவை அரசு மருத்­து­வ­ம­னை­யில் தற்­போது கறுப்­புப் பூஞ்சை பாதிப்­பு­டன் 111 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற னர். இது­வரை 170 பேருக்கு அறுவை சிகிச்சை செய்­துள்­ளோம்.

"பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் சுமார் 80% பேருக்கு மேல் நீரி­ழிவு நோய் பாதிப்­புள்­ள­வர்­கள். மூக்­கில் இருந்து ரத்­தம் கலந்த சளி வரு­தல், முகத்­தில் வலி, மர­ம­ரப்பு, கண்­கள் சிவப்­பாக மாறு­வது, கண்­ணைச் சுற்றி வீக்­கம், கண் வலி, கண் பார்வை குறை­பாடு, தலை­வலி, பல்­வலி, பற்­கள் ஆடு­வது ஆகிய அறி­கு­றி­கள் இருந்­தால் உட­ன­டி­யாக மருத்­து­வரை அணுகி பரி­சோ­தித்­துக் கொள்­ள­வேண்­டும்," என்­றார்.