கோவை காவல்துறை: ஆதாரங்களின் அடிப்படையில் முறையான விசாரணை நடத்தப்படும் முன்னாள் அமைச்சர் மீது ரூ.1,500 கோடி ஊழல் புகார்

கோவை காவல்துறை: ஆதாரங்களின் அடிப்படையில் முறையான விசாரணை நடத்தப்படும் முன்னாள் அமைச்சர் மீது ரூ.1,500 கோடி ஊழல் புகார்

2 mins read
58b78511-82cd-4894-a20d-7d5b34080a38
ரேஸ்கோர்ஸ் ரகுநாதன். -
multi-img1 of 2

கோவை: முன்­னாள் அமைச்­சர் எஸ்.பி.வேலு­மணி ரூ.1,500 கோடிக்கும் மேலாக ஊழல் செய்­துள்­ளார். மோசடியில் ஈடுபட்ட அவர்மீது சட்டப்படி கடும் நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்­னாள் அதி­முக நிர்­வா­கி­யும் இப்போதைய திமுக உறுப்பினரு மான ரேஸ்­கோர்ஸ் ரகு­நா­தன் என்­ப­வர் லஞ்ச ஒழிப்­பு காவல்­து­றை­யிடம் புகார் அ­ளித்­துள்­ளார்.

ஒரு­சில தினங்­க­ளுக்கு முன்­பு­தான் அதி­முக முன்­னாள் போக்கு­­வரத்துத் துறை அமைச்­சர் எம்.ஆர்.விஜயபாஸ்­க­ருக்­குச் சொந்­த­மான 26 இடங்­களில் சோதனை நடத்தப்பட்டு விஜ­ய­பாஸ்­கர், அவ­ரது மனைவி விஜ­ய­லட்­சுமி, தம்பி சேகர் மீது லஞ்ச ஒழிப்­புப் போலி­சார் வழக்­குப் பதிந்துள்ளதாக தக வல்­கள் வெளியாகின.

இந்­நி­லை­யில், கோவை மாந­க­ரில் நிறைவேற்றவேண்டிய பல்­வேறு திட்­டங்­களை முழு­மை­யாக நிறை வேற்றாமல் மோசடியில் ஈடுபட்ட தாக அதிமுகவின் மற்றொரு முன்னாள் அமைச்சர் மீது தெரி­விக்­கப்­பட்­டுள்ள புகார், அர­சி­யல் வட்­டா­ரத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ரேஸ்­கோர்ஸ் ரகு­நா­தன் அளித்துள்ள புகார் மனுவில், "கடந்த அதி­முக ஆட்சியில் பல்­வேறு முறை­கே­டு­களும் லஞ்ச லாவண்­யங்­களும் நடை­பெற்று பொது­மக்­க­ளின் வரிப்­பணத்தை பல்லாயிரம் கோடிகளில் வேலு­மணியும் ஒருசில சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களும் மோசடி செய்துள்ளனர்.

"அத்­தி­க்கடவு-அவி­நாசி திட்­டம், பில்­லூர் குடி­நீர் திட்­டம், நொய்­யல் புன­ர­மைப்புத் திட்­டம், பாதாள சாக்­கடைத் திட்­டம், உக்­க­டம் மேம்­பாலப் பணி­கள், பந்­த­ய­ச் சாலை திட்­டம், குடிசை மாற்று வாரிய வீடு­கள் திட்­டம், சூயஸ் குடி­நீர் திட்­டம், வெள்­ள­லூர் பேருந்து நிலை­யப் பணி­கள் ஆகி­ய­வற்­றில் ஊழல் நடை­பெற்­றுள்­ளது.

"அனைத்து கோவை மாந­க­ராட்சிப் பணி­க­ளி­லும் 12% தரகுத் தொகை பெற்­றுள்­ளார். அதி­க மாக கொள்­ளை­ய­டித்த வேலு­மணி மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," எனக் கூறியுள்ளார்.

"புகார் குறித்த ஆதா­ரங்­க­ளைக் கேட்­டுள்­ளோம். அதன் அடிப்­ப­டை­யில் விசா­ரணை முறைப்படி நடத்தப் படும்,'' என்று லஞ்ச ஒழிப்­புத்­துறை போலி­சார் கூறியுள்ளனர்.

ஆக அதிகமாக பொதுமக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து, மக்களை வஞ்சித்த எஸ்.பி.வேலுமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உரிய நியாயம் வழங்கவேண்டும்.

திமுக உறுப்பினரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரேஸ்­கோர்ஸ் ரகு­நா­தன்