தடுப்பூசி போட்டுள்ள ஒரு லட்சம் கர்ப்பிணிகள்

செங்­கல்­பட்டு: தமிழகத்தில் ஏறத்தாழ 1 லட்சத்துக்கு ஏழாயிரத்து 838 கர்ப்பிணிகள் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமி­ழ­கத்­தில் கர்ப்­பி­ணி­க­ளுக்கு கொரோனா தடுப்­பூசி போடும் பணி இம்­மா­தம் 3ஆம் ேததி தொடங்­கி­யதை அடுத்து, தமி­ழ­கம் முழு­வ­தும் 7 லட்­சத்து 38 ஆயி­ரத்து 583 கர்ப்­பி­ணி­க­ளுக்கு தடுப்­பூசி போட இலக்கு நிர்ணயிக்­கப்­பட்­டுள்­ள­தாக மருத்­து­வத் துறை அமைச்­சர் மா. சுப்ரமணி­ய­னும் சுகா­தா­ரத்­துறை செய­லர் டாக்­டர் ராத­ாகி­ருஷ்­ண­னும் கூறி­யி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில், செங்­கல்­பட்டு மாவட்­டம், அனு­மந்­த­புத்­தேரி அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் கர்ப்­பி­ணி­க­ளுக்­கும் பாலூட்­டும் தாய்­மார்­க­ளுக்­கும் தடுப்­பூசி சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

இதைப் பார்­வை­யிட்ட செங்­கல்­பட்டு ஆட்­சி­யர் ராகுல்­நாத் கூறு­கை­யில், “செங்­கல்பட்டு மாவட்­டத்­தில் உள்ள அரசு மருத்­து­வ­மனை, அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யங்களுக்கு வரும் கர்ப்­பிணி­கள், பாலூட்­டும் தாய்­மார்­க­ளுக்­கு தனிவரிசை அமைத்து முன்­னு­ரிமை அளித்து வரு­கிறோம்.

“செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் நேற்றுவரை 4,048 கர்ப்­பி­ணி­களுக்கும் 2,228 பாலூட்­டும் தாய்­மார்­க­ளுக்­கும் சிறப்பு முகாம்­களில் தடுப்­பூசி செலுத்­தப்­பட்­டுள்­ளது.

“கிரா­மங்­களில் வசிக்­கும் கர்ப்­பி­ணி­கள், பாலூட்­டும் தாய்­மார்­கள், மாற்­றத்திற­னாளிகளுக்கு அவர்­கள் வசிக்­கும் பகு­தி­க­ளுக்கே சென்று கொரோனா தடுப்­பூ­சி­ செலுத்­தப்­ப­டு­கிறது,” என்­றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!