நடிகர் விஜய் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த தடை

நடிகர் விஜய் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த தடை

2 mins read
ee554aba-e854-49c7-9e79-24309e5d4cf8
-

சென்னை: இங்­கி­லாந்­தில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வழக்கு தொடர்­பில், நடி­கர் விஜய்க்கு ரூ. 1 லட்­சம் அப­ரா­தம் விதித்து தனி நீதி­பதி எஸ்.எம் சுப்­பி­ர­ம­ணி­யம் பிறப்­பித்த உத்­த­ர­வுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட ரோல்ஸ்­ராய்ஸ் காருக்கு நுழைவு வரியை நீக்­கக் கோரி நடி­கர் விஜய் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் மனுத் தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

இந்த வழக்கை விசா­ரித்த தனி நீதி­பதி எஸ்.எம். சுப்­பி­ர­ம­ணி­யம், "வரி என்­பது நன்­கொடை அல்ல. கட்­டா­யப் பங்­க­ளிப்பு. சமூக நீதிக் காகப் பாடு­ப­டு­வது போல் சித்தி ரிக்­கப்­படும் நடி­கர்­கள் வரி விலக்கு கோரு­வதை ஏற்கமுடி­யாது. நடி­கர்­கள் உண்­மை­யான நாய­கன்­க­ளாக இருக்­க­வேண்­டுமே தவிர ரீல் நாய­கன்­க­ளாக இருக்­கக்கூடாது," என விமர்­சித்திருந்­தார். அத்­து­டன், விஜய்­யின் வழக்­கைத் தள்­ளு­படி செய்து ரூ.1 லட்­சம் அப­ரா­தம் விதித்து உத்­த­ர­விட்­டார்.

இந்­நி­லை­யில், இந்த தீர்ப்பை எதிர்த்து நடி­கர் விஜய் சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீட்டு மனுத்­தாக்­கல் செய்­தார்.

இவ்­வ­ழக்கு நேற்று உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் எம்.துரை­சாமி, ஆர்.ஹேம­லதா அமர்வு முன்பு விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது விஜய் தரப்­பில் முன்­னி­லை­யான மூத்த வழக்­க­றி­ஞர் விஜய நாரா­ய­ணன், "தனி நீதி­பதி மனு­தா­ர­ரைத் தேச விரோ­தி­யா­கக் குறிப்­பிட்­டுள்­ளார். எனவே இந்த தேவை­யற்ற கருத்­து­களை நீக்க வேண்­டும். ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்­த­வேண்­டும் என்ற உத்­த­ரவை எதிர்க்­க­வில்லை. அதை மதிக்­கி­றோம். நுழைவு வரி செலுத்­த­வும் தயா­ராக உள்­ளோம்," என்று வாதிட்­டார்.

இதை­ய­டுத்து நடி­கர் விஜய்க்கு விதிக்­கப்­பட்ட அப­ரா­தத்­திற்கு நீதி­ப­தி­கள் இடைக்­கா­லத் தடை விதித்து உத்­த­ர­விட்­ட­னர்.