சென்னை: தமிழகத்தில் அன்றாட கொரோனா பாதிப்பு குறைந்துள்ளபோதிலும் இத்தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 5%ஆகவே தொடர்ந்து நீடித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஜூலை மாதத்தில் மட்டும் கடந்த 25 நாள்களில் 3,367 குழந்தைகளுக்குத் தொற்று கண்டறியப் பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 குழந்தைகள் வரை தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவதாகவும் மாநிலத்தில் அன்றாடம் புதிதாக கிருமி தொற்று வோரில் 5% பேர் குழந்தை களாகவே உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,785 பேருக்கு தொற்று உறுதி யானது. கோவையில் 164 பேரும் சென்னையில் 122 பேரும் பாதிக்கப்பட்டனர். ஒரேநாளில் 2,361 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்தனர்.

