கர்நாடக முதல்வராக பசவராஜ் பதவியேற்பு

கர்நாடக முதல்வராக பசவராஜ் பதவியேற்பு

1 mins read
b2b60d1b-186b-4a4c-9048-53690f31b0e0
புதிய முதல்வராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை. படம்: ஏஎஃப்பி -

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கத்­தின் புதிய முதல்­வ­ராக பச­வ­ராஜ் பொம்மை நேற்று பத­வி­யேற்­றுக்­கொண்­டார்.

ஆளு­நர் மாளி­கை­யில் நடை­பெற்ற விழா­வில், கர்­நா­ட­கா­வின் 23வது முதல்­வ­ரா­கப் பத­வி­யேற்ற பச­வ­ராஜ் பொம்­மைக்கு ஆளு­நர் தாவர் சந்த் ஹெலாட் பத­விப் பிர­மா­ண­மும் ரக­சி­யக் காப்பு பிர­மா­ண­மும் செய்­து­வைத்­தார்.

மூன்று துணை முதல்­வர்­களும் அமைச்­சர்­களும் நேற்று பத­வி­யேற்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில், இன்­னும் ஒரு வாரத்­துக்­குள் அவர்கள் பதவி ஏற்­பார்­கள் என்று கூறப்­ப­டு­கிறது.

முன்­னாள் முதல்­வர் எடி­யூ­ரப்பா வின் அமைச்­ச­ர­வை­யில் பச­வ­ராஜ் பொம்மை, 61, உள்­துறை அமைச்ச ராகப் பொறுப்பு வகித்­த­வர்.

பச­வ­ரா­ஜின் தந்­தை­யான எஸ்.ஆர்.பொம்­மை­யும் கர்­நா­ட­கத்­தின் முதல்­வ­ரா­க இருந்தவர்.

"மக்­க­ளின் நன்­னம்­பிக்­கை­யைப் பெற்று ஏழை மக்­க­ளின் வாழ்வு உயர பாடு­ப­டு­வேன்," என்று செய்தி யாளர்­க­ளி­டம் பேசிய பச­வ­ராஜ் பொம்மை தெரி­வித்­தார்.