பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டம் செய்த ஜெயக்குமார்

பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டம் செய்த ஜெயக்குமார்

1 mins read
c73a7ea7-19d5-4d60-8490-feccfc4e5613
-

சென்னை: தேர்தல் அறிக்கையில் திமுக தரப்பில் ெகாடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் "அண்ணே அண்ணே... ஸ்டாலின் அண்ணே...

நம்ம ஊரு நல்ல ஊரு...

இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே..." என்ற பாடலைப் பாடி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டம் நடத்தினார். நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றவேண்டும் என பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.