புதுடெல்லி: மாநிலங்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரி முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக "வேண்டும், வேண்டும், விவாதம் வேண்டும்," என்று தமிழில் முழக்கமிட்டனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் முழக்கமிடுவதுதான் வழக்கம். ஆனால், நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை கூட்டத்தில் சட்டத்திருத்த மசோதாக்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதம் வேண்டும் என்று தமிழில் முழக்கமிட்டனர்.
தமிழக எம்பிக்கள் மட்டுமின்றி, மற்ற மாநில எம்பிக்களும் விவாதம் வேண்டும் என்று தமிழிலேயே முழக்கமிட்டனர்.

