சென்னை: கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக-பாஜக இணைந்து போட்டியிட்டதைப் போன்றே வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றும் இக்கூட்டணி பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் அதிமுக தனது வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டதாக அதிமுக தலைவர்கள் வெளிப்படையாக குறை கூறியிருந்த நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உடையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

