அமைச்சர்: யாரையும் யாருக்கும் பழிவாங்கும் எண்ணமில்லை

அமைச்சர்: யாரையும் யாருக்கும் பழிவாங்கும் எண்ணமில்லை

1 mins read
5cebef73-2dca-41f6-8d14-d423523ca22f
-

மதுரை: தமி­ழ­கத்­தில் புதிய பேருந்­து­க­ளைக் கொள்­மு­தல் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் அதேேவ­ளை­ யில் புதி­தாக 2,200 பேருந்­து­களை வாங்­கு­வ­தற்­காக ஜெர்­ம­னி­யில் இருந்து கட­னு­தவி வரவுள்­ளது என போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் ராஜகண்­ணப்­பன் தெரி­வித்­து உள்­ளார்.

"இப்­போ­தைய அரசு தொழி­லாளர்­க­ளுக்­கான அர­சாக விளங்­கும். கொரோனா காலம் ஒரு முடி­வுக்கு வந்தபிறகு அனைத்து தொழிற்­சங்க நிர்­வா­கி­க­ளை­யும் அழைத்­துப் பேசி, முதல்­வ­ரு­டன் ஆலோ­சித்து ஒரு நல்ல முடிவு எடுக்­கப்­படும். தொழி­லா­ளர்­க­ளின் எந்­த­வொரு பிரச்­சி­னை­யி­லும் பின்­வாங்­கா­மல் நியா­ய­மான முறை­யில் நடந்துகொள்­வோம்," என்­றும் அமைச்­சர் ேமலும் கூறி­னார்.

மதுரை விமான நிலை­யத்­தில் செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் அமைச்­சர் பேசி­ய­போது, "கடந்த ஆட்­சி­யின்­போது அனைத்து துறை­க­ளி­லும் இருந்து வந்த குள­று­ப­டி­க­ளைச் சரி­செய்ய வேண்­டி­யது காலத்­தின் கட்­டா­யம். இதில் பழி­வாங்­கும் உணர்வு என்­பது கிடை­யவே கிடை­யாது. உப்பு தின்­ற­வன் தண்­ணீர் குடிப்­பான்; தப்பு செய்­த­வன் தண்­டனை அனு­ப­விப்­பான்.

"கடந்த ஆட்­சி­யில் ஏற்­பட்ட தவ­று­களைச் சரிசெய்­வதே முதல்­வர் மற்­றும் அனைத்­துத் ­துறை அமைச்­சர்­க­ளின் வேலை­யாக உள்­ளது. எனவே, இந்த ஆட்­சி­யில் நியா­யத்தை எதிர்­பார்க்­க­லாம்," என்று கூறி­னார்.

உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். இதுதான் உலக நியதி. கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். இது யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கை அல்ல.

போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்