சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையில் காற்றுத் தூய்மைக்கேடு வழக்கத்தைவிட நான்கு மடங்காக அதிகரித்து இருப்பதாகவும் இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறைந்த பரப்பளவும் அதிக மக்கள் நெருக்கடியும் நிறைந்த சென்னை நகரில் வாகனப்போக்குவரத்து, தொழிற்சாலைகள் ஆகியவற்றால் காற்றின் தரம் கேள்விக்குறியாகி உள்ளதாகக் கூறப்படு கிறது.
தமிழகத்தில் கொரோனா முதல், இரண்டாம் அலையின் தாக்கத்துக்கு சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த நான்கு மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விடவும் காற்றுத் தூய்மைக்கேடும் அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
'ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி' என்ற அமைப்பு சென்னையில் திரிசூலம், பாரிமுனை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் அனல் மின்நிலையம் அருகில் உள்ள சேப்பாக்கம், வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட 20 இடங்களில் ஆய்வு நடத்தி உள்ளது.
சென்னையில் வீசும் காற்றில் காற்றுத் தூய்மைக்கேட்டை ஏற்படுத் தும் துகள்களின் அளவு அதி கரித்துக் காணப்படுவதுடன் சிலிக்கான், மாங்கனீசு, நிக்கல் உள்ளிட்ட ஆபத்தான துகள்களும் இருப்பதாக உறுதியாகியுள்ளது.
இவற்றால் நரம்பியல் பாதிப்புகள், புற்றுநோய், நுரையீரல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக திரிசூலம், வியாசர்பாடி, பாரிமுனை ஆகிய இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு அதிகம் காணப்பட்டது.
இப்பகுதியில் வசிக்கும் இதய அல்லது நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், வயதானவர்கள், சிறார்கள் உடல்ரீதியான செயல்பாடுகளை அதிகம் மேற்கொள்ளக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தின் முகப்பில் ெகாவிட்-19 தொற்றில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதன் அருகே பயணிகள் நடந்து செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி
சென்னை: சென்னை, கோவை, ஈரோட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மூன்றாவது அலையின் அறிகுறியாக இருக்குமோ என்ற அச்சம் மக்களிடம் தலைகாட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் கிருமி பாதிப்பு படிப்படி யாகத் தணிந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை 1,756 பேருக்கு தொற்று உறுதியானது. எனினும் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் 126 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 164 பேராக அதிகரித்துள்ளது. கோவையில் 179 பேரும் ஈரோட்டில் 140 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

