ஓ.பன்னீர்செல்வம்: சசிகலாவை பொதுக் குழுதான் நீக்கியது

ஓ.பன்னீர்செல்வம்: சசிகலாவை பொதுக் குழுதான் நீக்கியது

1 mins read
8a528634-3071-43c8-8445-22345749c82a
பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலையில் திமுக அரசைக் கண்டித்து கையில் பதாகை ஏந்தி அதிமுக பிரமுகர்கள், ெதாண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு சிலர் குட்டிக்கரணம் அடித்தும் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.படம்: தமிழக ஊடகம் -

தேனி: சசி­க­லாவை அதிமுக பொதுக்­குழுதான் கட்­சி­யில் இருந்து நீக்­கி­யது என்­றும் அதி­மு­கவை தின­க­ரன் கூறி யுள்­ளது போல் அவ்­வ­ளவு எளி­தாக யாரா­லும் கைப்­பற்ற முடி­யாது என்­றும் ஓ.பன்­னீர்­செல்­வம் தெரி­வித்­துள்­ளார்.

தேனி மாவட்­டம், போடி­யில் அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்செல்­வம் செய்­தி­யாளர்களுக்குப் பேட்டி அளித்­த­போது, "நடந்து முடிந்த தேர்­தல் பிர­சா­ரத்­தின்போது 10 ஆண்­டு­கால அதி­முக ஆட்­சி­யில் நிறை­வேற்­றிய மக்­கள் நலத்­திட்­டங்­களைக் கூறி மக்­க­ளி­டம் வாக்கு கேட்­டோம். ஆனால், திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லி­னும் அக்­கட்­சி­யின் முன்­னணித் தலை வர்­களும் பொய்­யான வாக்­கு­றுதி களைக் கூறி­னர்.

"திமுக தேர்­தல் அறிக்­கை­யில் 505 வாக்­கு­று­தி­கள் கொடுக்­கப்­பட்­டன. அவற்­றில் முக்­கி­ய­மான வாக்­கு­றுதிகளைக்­கூட திமுக இன்­னும் நிறை­வேற்­றா­மல் உள்­ளது. பொய்­ வாக்­கு­று­தி­களை அளித்து ஆட்­சிக்கு வந்த திமுக அவற்றை நிறை­வேற்ற வேண்­டும் என்­ப­து­தான் எங்­களது வேண்டுகோள்.

"கொரோ­னாவைக் கட்­டுப்­படுத்து­வ­தில் அதிமுக அரசு மிகச் சிறப்­பாகச் செயல்­பட்டு இருக்­கிறது என்று பிர­த­மர் மோடி பாராட்­டி­னார். ஆனால், திமுக ஆட்­சி­யில் கொரோனா மர­ணங்­கள் மறைக்­கப்­பட்டு இருக்­கிறது.

"சட்­ட­மன்­றத்­தில் நிதி அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் என்ன கேள்வி கேட்­டா­லும் அதற்கு பதில் அளிக்க நான் தயாராக உள்ேளன்," என்று கூறி­னார்.