திருவண்ணாமலை: கொரோனா தடுப்பூசியைத் தயக்கமின்றி பொதுமக்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு சிறுமி பத்மாசனம், சிரசாசனம், தனுசாசனம் உள்ளிட்ட 133 யோகாசனங்களைச் செய்துகாட்டி அசத்தினார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருவருட்பா ஆசிரமத்தில் ெபாதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை விளக்கும் வகையில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சமந்தா, 7, என்ற சிறுமி 133 யோகாசனங்கள் செய்துகாட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி, உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
படம்: ஊடகம்

