கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் தலைவராக வாய்ப்பு

கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் தலைவராக வாய்ப்பு

1 mins read
ddbca5b0-3c8b-4eef-b392-6c112e8b81cf
-

சென்னை: தமிழக பாஜக தலைவராக இளைஞரான அண்ணா மலை நியமனம் செய் யப்பட்டதை அடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் இளைஞரை தலைவராக நியமிக்க வேண்டும் என டெல்லி மேலிடத்துக்கு கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஏற்கெனவே இளைஞர்களைக் காங்கிரஸ் கட்சியில் ஈர்க்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் சித்து, தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி ஆகியோர் நிய மனம் செய்யப்பட்டனர். இப்போது, தமிழகத்தில் இளைஞர்களை ஈர்க்கும் தலைவரை நியமிக்க ராகுல்காந்தி ஆலோ சித்து வருவதாகவும் இதையடுத்து விரைவில் கேஎஸ் அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு கார்த்திக் சிதம்பரம் (படம்) தமிழக காங்கிரஸ் தலைவராகப் பதவி நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.