ஊட்டி: உதகையில் காதல் திருமணம் செய்து, பெற்ற குழந்தைகளை வளர்த்து ஆளாக்க முடியாமல் விற்பனை செய்த பெற்றோர் உள்ளிட்ட ஆறு பேரை போலிசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியை அடுத்த காந்தல் கஸ்தூரிபாய் காலனியைச் சேர்ந்தவர்கள் ராபின், 29, மோனிஷா, 24.
தங்களது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஓர் ஆண், இரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தம்பதிக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா கால நெருக்கடி காரணமாக கார் ஓட்டுநரான ராபின் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வருமானமின்றி குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தனது மூன்று வயது பெண் குழந்தை வர்ஷாவை மோனிஷா தனது அக்கா பிரவீனாவிடம் ஒப்படைத்தார்.
இரண்டாவது பெண் குழந்தையை ராபினின் நண்பர் உதவியுடன் திருப்பூரைச் சேர்ந்த நிசார்பாய், 51, என்பவரிடம் ரூ.25,000க்கும் மூன்று மாதமே ஆன ஆண் குழந்தையைச் சேலம் பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, பூபதி தம்பதிக்கு ரூ.30,000க்கும் பெற்றோர் விற்பனை செய்துள்ளனர்.
அதன்பிறகு ராபின், மோனிஷா இருவரும் மது போதையுடன் பிரவீனா வீட்டுக்குச் சென்று தனது குழந்தையைத் திருப்பித் தரும்படியும் அந்த குழந்தையையும் விற்கவேண்டும் என்று கூறியும் வாக்குவாதம் ெசய்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில் வறுமை கார ணமாக குழந்தைகளை விற்றதை ராபின், மோனிஷா ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இவர்கள் உள்பட அறுவர் கைதாகினர்.