இணையக் குற்றங்கள் அதிகரிப்பு

இணையக் குற்றங்கள் அதிகரிப்பு

2 mins read
e8b50e33-1599-4660-894d-3c2f343c28c0
சென்னை, ஊனமாஞ்சேரியில் நடைபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில், பயிற்சியில் சிறந்து விளங்கிய துணை கண்காணிப்பாளர்களுக்கு பதக்கங்கள், சிறப்பு வாள் ஆகியவற்றை முதல்வர் வழங்கினார். படம்: ஊடகம் -

சென்னை: குற்­றங்­க­ளுக்கு தண்­டனை பெற்­றுத் தரும் துறையாக மட்­டு­மின்றி, குற்­றங்­களே நிக­ழா­மல் தடுக்­கும் துறை­யாக காவல்­துறை மாற­வேண்­டும் என்­பதுதான் தனது ஆசை என காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர்­கள் பயிற்சி நிறைவு விழா­வில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் பேசி­யுள்­ளார்.

இன்று இணைய வசதி வந்த தற்குப் பிறகு அடையாளமற்ற, முக மற்ற குற்றவாளிகள் ஏராளமாகப் பெருகிவிட்டார்கள் என்று வேதனை தெரிவித்துள்ள முதல்வர், "இணையவெளி பொருளாதாரக் குற்றங்கள் அதிகமாகிவிட்டன.

"நிதி மற்றும் பாலியல் குற்றவாளி கள் நவீன தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

"அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இணை­யக் குற்­றங்­க­ளைத் தடுக்க மிக­வும் நவீ­ன­ வழி­மு­றை­க­ளைப் பின்­பற்றி வரு­கின்­ற­னர். அத்­த­கைய நவீன வழி­மு­றை­களை நாமும் தெரிந்­து ெகாள்ள வேண்­டும்.

"2030க்குள் இணையக் குற்றங் கள் நடக்காத நாடாக மாற்றிக் காட்டப் போவதாக ஐக்கிய அரபு சிற்றரசுகள் அறிவித்துள்ளன. எத்த கைய தொழில்நுட்பத்தை அவர்கள் உருவாக்கப் போகிறார்கள் என்பதை நமது காவல்துறையும் அறிந்து கொள்ளவேண்டும்," என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், "சட்டம்-ஒழுங்கு சிறப்பாக அமைந்து, பொதுமக்கள் பாது காப்பான சூழலை உணர்ந்துவிட்டால் மற்ற செயல்களைச் சரியாகச் செய்யலாம். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் கள் சிறக்கும், முதலீடுகள் பெருகும். அச்சமின்றி மனிதர்கள் உழைப்பில் கவனம் செலுத்துவார்கள்.

"அர­சாங்­கத்­தில் இருக்­கும் எத்­த­னையோ துறை­க­ளைப் போல காவல்­து­றை­யும் ஒரு துறை­தான் என்று நீங்­கள் நினைத்துவிடக்­கூடாது. ஒரு அர­சி­டம் இருந்து முத­லில் மக்­கள் எதிர்­பார்ப்­பது அமை­தி­யைத்­தான். அந்த அமை­தியை ஏற்­ப­டுத்­தித் தரவேண்­டிய பெரும் பொறுப்பு காவல்­து­றைக்கு உள்­ளது," என்றார்.

தீயதை பொசுக்கும் தீயாகவும் அனைவருக்கும் பொதுவான வானமாக வும் காவல்துறை இருக்கவேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்