எரிந்த நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள்

எரிந்த நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள்

1 mins read
20d35588-22cb-40c0-b778-cca01c8bdf88
எரிந்த நிலையில் காட்டுச் செடிகளுக்குள் காணப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களைப் பார்வையிடும் போலிசார். படம்: ஊடகம் -

திருப்­பத்­தூர்: ஜோலார்­பேட்டை அருகே அதிர்ச்­சி­யூட்­டும் வகை­யில் பெண்­ணின் உடல் பாகங்­கள் எரிந்த நிலை­யில் கண்­டெ­டுக்­கப்­பட்டதை அடுத்து, குற்­ற­வா­ளி­க­ளைப் பிடிப்­ப­தற்கு மூன்று போலிஸ் தனிப்படை அமைக்­கப்­பட்­டுள்­ள­து.

திருப்­பத்­தூர் மாவட்­டம், ஜோலார்­பேட்டை அருகே உள்ள கொட்­டாறு தரைப்­பா­லம் பகு­தி­யில் எரிந்த நிலை­யில் மனித உடல் பாகங்­கள் கிடப்­ப­தாக ஜோலார்­பேட்டை காவல் நிலை யத்­துக்கு தக­வல் கிடைத்­தது.

போலி­சா­ரின் முதல் கட்ட விசா­ர­ணை­யில், 30 வயது மதிக்­கத்­தக்க பெண் எரித்­துக் கொல்லப்பட்டது தெரி­ய­வந்­தது.‌

தட­யவி­யல் நிபு­ணர்­கள் எரிந்த நிலை­யில் கிடந்த கால், கை உள்­ளிட்ட உடல்பாகங்­க­ளைக் கைப்­பற்றி தட­யம் சேக­ரித்­த­னர்.

சிம்பா என்ற மோப்­ப­ நா­யும் வர­வழைக்­கப்­பட்டு, ரத்­தக் கறை­கள் படிந்த புட­வையை மோப்­பம் பிடித்­தது.‌ அதன்­பி­றகு ஒரு கிலோ­மீட்­டர் தூரத்­திற்கு ஓடிய சிம்பா, பெரிய கம்­மி­யம்­பட்டு பகு­தி­யில் உள்ள பள்ளிக்கூடம் அருகே நின்றது.

அடை­யா­ளம் தெரி­யாத நிலை யில் மீட்கப்பட்டுள்ள பெண் ஒரு­வேளை கூட்­டுப் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருக்­க­லாம் என்ற கோணத்­தில் தீவிர விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.‌