கடலூர்: இளம்பெண்ணுடன் நீண்ட நாட்களாகப் பழகி, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய இளை யருக்கு கடலூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.50,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
கடலூர் மாவட்டம், சேத்தியாத் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார், 24. கடந்த 2017ஆம் ஆண்டு எம்எஸ்சி படித்து வந்த இவருக்கும் அரசுக் கல்லூரியில் படித்து வந்த 22 வயது பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ள அருண்குமார், அதன்பின் பலமுறை கேட்டும் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் அருண்குமார் மீதான குற்றம் நிரூபணமானது.

