தமிழகத்தில் கொரோனாவால் ஆதரவிழந்த 4,829 குழந்தைகள்

தமிழகத்தில் கொரோனாவால் ஆதரவிழந்த 4,829 குழந்தைகள்

2 mins read
58904ee2-63a9-48c8-8db8-b28a042f49a1
-

புதுடெல்லி: தமிழகத்தில் கொரோனா முதல், இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக இதுவரை 4,829 குழந்தைகள் தம் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையுமே இழந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 150 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த ஆண்டு மார்ச் மாத கடைசி முதல் இம்மாதம் 23ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியா முழு வதும் 6,855 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்து திடீரென்று அனாதை ஆகியுள்ளனர்.

"அத்துடன், 68,218 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ள னர். 247 குழந்தைகள் ஆதரிக்க யாருமின்றி கைவிடப்பட்டுள்ளனர்.

"தமிழகத்தில் 4,829 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையுமே இழந்துள்ளனர்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித் துள்ள உத்தரவில், "தொற்றால் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை, உதவிகள் பற்றிய விவரங்களை ஆவணங்களாக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் ஆகஸ்ட் 23க்குள் தாக்கல் செய்யவேண்டும்," என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே, கிருமித்தொற்றி னால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பு நிதி செலுத்தப்படும். 18 வயது நிறைவடையும்போது வட்டியோடு அந்தத் தொகை குழந்தையிடம் வழங்கப்படும்.

உறவினர், பாதுகாவலரின் ஆதர வில் வளரும் குழந்தைகளின் பரா மரிப்புச் செலவாக மாதந்தோறும் தலா ரூ.3,000 உதவித்தொகை அவர்களது 18 வயது வரை வழங்கப்படும் என்று கடந்த மே மாதம் முதல்வர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.