ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிட்டுள்ள ஆணையர்

ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிட்டுள்ள ஆணையர்

1 mins read
684a3d4e-fdec-40ef-bf35-c22b83dcad97
-

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள அரசு மற்­றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடு­நிலை, உயர்­நிலை, மேல்­நி­லைப்­பள்ளி தலைமை ஆசி­ரி­யர்­கள் மற்­றும் அனைத்து ஆசி­ரி­யர்­களும் அர­சின் வழி­காட்டு நெறி­முறை களைப் பின்­பற்றி வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் நாள்­தோ­றும் பள்­ளிக்கு வந்து பணி­புரியவேண்­டும் என்று பள்­ளிக் கல்­வித்­துறை உத்­த­ர­விட்­டுள்­ளது.

மாண­வர் சேர்க்கை, பாடப் புத்­த­கங்­கள் விநி­யோ­கம், கல்­வித் தொலைக்­காட்சி வழி பாடம் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு தேர்வு நடத்­து­தல், பள்ளி வளா­கங்­களை பரா­ம­ரித்­தல் போன்ற பணிகளுக்­காக ஆசி­ரி­யர்­கள் சுழற்சி முறை­யில் பள்­ளி­க­ளுக்கு வருகை தரும் நிலை­யில், பள்­ளிக்­கல்­வித்­துறை ஆணை­யர் நந்­த­கு­மார் நாள்தோறும் பள்ளிக்கு வரும்படி உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார்.