சென்னையில் ஒன்பது சந்தைப் பகுதிகளில் கடைகள் திறக்க தடை

சென்னையில் ஒன்பது சந்தைப் பகுதிகளில் கடைகள் திறக்க தடை

2 mins read
4e164de6-c7e6-4ec0-b761-24097e3d6713
தொற்றுப்பரவலைத் தடுக்க சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் சந்தை போன்ற பகுதிகளில் உள்ள கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகள் நேற்று வேறு இடங்களைத் தேடிச் சென்றனர். திடீரென கடைகள் மூடப்பட்டதை அறியாத பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். படம்: இபிஏ -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா மூன்­றா­வது அலை­யைத் தவிர்க்க பொது­மக்­கள் கூடு­தல் விழிப்பு­ணர்­வு­டன் இருக்க வேண்­டும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறிவுறுத்தி உள்­ளார்.

பொது­மக்­கள் அர­சாங்­கம் மேற்­கொண்டு வரும் நட­வ­டிக்­கை­குக்கு ஒத்­து­ழைக்க வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

மக்­கள் தேவை­யின்றி வீடு­களை விட்டு வெளியே வர வேண்­டாம் என்­றும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை தமி­ழ­கத்­தில் ஊர­டங்கு நீட்­டிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, கொரோனா பர­வல் தடுப்பு விதி­மு­றை­களை கடு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என மாவட்ட ஆட்­சி­யர்­கள், காவல்­து­றை­யி­ன­ருக்கு தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் தொற்று விகி­தம் சற்றே அதி­க­ரித்­துள்­ளது என்­றும் இது குறித்து ஆய்வு நடத்­தப்­படும் என்­றும் மக்­கள் நல்­வாழ்­வு­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­உள்­ளார்.

"சென்னை, கன்­னி­யா­கு­மரி, ஈரோடு, கட­லூர், கோவை மாவட்­டங்­களில் தொற்று எண்­ணிக்கை சற்றே உயர்ந்­துள்­ளது.

இதற்கு கார­ணம் என்ன என்­பது குறித்து ஆய்வு செய்ய அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யர்க்கு அறி­வு­றுத்தி உள்­ளோம்.

"கேர­ளா­வில் வீடு­களில் தங்கி சிகிச்­சை­பெ­றும் முறை அதி­க­ரித்­துள்­ள­தால்­தான், அங்கு தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. அது­போல் தமி­ழ­கத்­தில் அது­போன்று இல்­லா­மல், தொற்று பாதித்­த­வர்­களை மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­தித்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்தி உள்­ளோம்," என்று அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, சென்­னை­யில் மக்­கள் அதி­கம் கூடும் ஒன்­பது இடங்­களில் உள்ள கடை­க­ளைத் திறக்க தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா தொற்றை கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் நடை­மு­றை­யில் உள்ள ஊர­டங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி­வரை கூடு­த­லாக எவ்­வித தளர்­வு­களும் இன்றி நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.