வங்கிக் கொள்ளை முயற்சி: பெண் ஊழியர் கொலை

வங்கிக் கொள்ளை முயற்சி: பெண் ஊழியர் கொலை

1 mins read
fd641e1b-bac0-46fe-9507-330866cc1784
-

மும்பை: தனி­யார் வங்­கிக் கிளை­யில் நடந்த கொள்ளை முயற்­சி­யைத் தடுக்க முயன்ற வங்கி உதவி மேலா­ளர் குத்­திக்­கொல்­லப்­பட்­டார். இச்­சம்­ப­வம் மும்­பை­யில் நிகழ்ந்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் இரவு சுமார் 8.30 மணி­ய­ள­வில் விரார் கிழக்கு பகு­தி­யில் உள்ள வங்­கிக் கிளை­யில் 35 வய­தான உதவி மேலா­ளர் யோகிதா, 32 வயது காசா­ளர் ஷ்ரத்தா ஆகிய இரு பெண்­களும் வேலை பார்த்­துக் கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது திடீ­ரென உள்ளே நுழைந்த இரு ஆட­வர்­கள் கத்தி முனை­யில் இரு பெண்­க­ளை­யும் மிரட்டி வங்­கிக்­கி­ளை­யின் பாது­காப்புப் பெட்­ட­கத்­தில் இருந்த நகை­கள், ரொக்­கப்­ப­ணத்தை கொள்­ளை­ய­டித்து தப்ப முயன்­ற­னர்.

அப்­போது இரு ஊழி­யர்­களும் கூச்­சல் எழுப்­பி­ய­தைக் கேட்டு சாலை­யில் சென்­ற­வர்­கள் உத­விக்கு ஓடி வந்­த­னர். இத­னால் ஆத்­தி­ரம் அடைந்த கொள்­ளை­யர்­கள், கத்­தி­யால் இரு பெண்­க­ளை­யும் குத்­தி­ய­தில் யோகிதா உயி­ரி­ழந்­தார்.

கொள்­ளை­யர்­களில் ஒரு­வனை பொது­மக்­கள் பிடித்­த­னர். விசா­ர­ணை­யில், அவர் அதே வங்­கி­யின் மற்­றொரு கிளை­யில் மேலா­ள­ரா­கப் பணி­யாற்­று­வ­தும் பணப்­பி­ரச்­சினை கார­ண­மாக கொள்­ளை­ய­டிக்க முயன்­ற­தும் தெரிய வந்­துள்­ளது.

தப்பி ஓடிய அவரது கூட்டாளிக்கு வலைவீசப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.