போபால்: முப்பது வயதான அரசு வேளாண் அதிகாரியைக் கடத்திச் சென்று, கத்தி முனையில் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாக ஐம்பது வயது பெண்மணி மீது ஆடவர் ஒருவர் போலிசில் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்தையும் அணுகி உள்ளார்.
ரின்கேஷ் என்ற அந்த அதிகாரி மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்ட வேளாண் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் பணியாற்றும் ஐம்பது வயதான கோகிலா என்ற ஒப்பந்த ஊழியர் ஜூன் மாதம் 16ஆம் தேதி மூன்று பேரின் துணையோடு தம்மை ஒரு காரில் கடத்திச் சென்றதாகவும் பின்னர் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்ளும்படி கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் ரின்கேஷ் போலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
வேறு வழியின்றி தாம் அப்பெண்மணியை திருமணம் செய்துகொண்ட நிலையில், மறுநாள் அந்தப் பெண்மணி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது தப்பியதாகவும் கூறியுள்ளார்.

