அனைத்துலக விமானப் பயணத்துக்கு தடை நீட்டிப்பு

அனைத்துலக விமானப் பயணத்துக்கு தடை நீட்டிப்பு

1 mins read
8671bc21-4730-4918-8fac-49c1459e5723
-

புது­டெல்லி: அனைத்­து­லக பய­ணி­கள் விமா­னப் போக்­கு­வ­ரத்­துக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

எனி­னும், தேவை­யின் அடிப்­ப­டை­யில் சில குறிப்­பிட்ட வழித்­த­டங்­களில் மட்­டும் திட்­ட­மி­டப்­பட்ட அனைத்­து­ல­கப் பய­ணி­கள் விமான சேவை அனு­ம­திக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தாக மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து பொது இயக்­கு­ந­ர­கம் தெரி­வித்­துள்­ளது.

கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் நெருக்­கடி கார­ண­மாக விமா­னப் போக்­கு­வ­ரத்­துக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

எனி­னும், அனைத்­து­லக சரக்கு விமா­னப் போக்­கு­வ­ரத்­துக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், மத்­திய அர­சின் ஏற்­பாட்­டின் கீழ் சில சிறப்பு விமா­னங்­கள் இயக்­கப்­ப­டு­வ­தற்­கும் விமா­னப் போக்­கு­வ­ரத்து பொது இயக்­கு­ந­ர­கம் அனு­மதி அளித்­துள்­ளது.