சுங்க அதிகாரி: கடத்தலில் கேரள முதல்வருக்கு தொடர்பு

2 mins read
1b2de13a-0c53-4c78-8000-95a7b875b4fd
-

திருவனந்தபுரம்: கேரளா உள்­பட இந்தியா­வின் பல்­வேறு மாநி­லங்­களில் நடந்து வரும் தங்கக்கடத்தல் மூலம் கோடிக்­க­ணக்­கில் பணம் கிடைப்­ப­தா­க­வும் இந்­தப் பணம் தேச விரோத செயல்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்­றும் கேரள சுங்க இலாகா ஆணை­ய­ராக இருந்த சுமித்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், கேர­ளா­வில் இருந்து வெளி­நா­டு­க­ளுக்கு டாலர் கடத்­தி­ய­தில் அம்­மா­நில முதல்­வர் பின­ராயி விஜ­ய­னுக்­கும் தொடர்­புள்­ள­தாக அவர் தெரி­வித்­துள்ள குற்­றச்­சாட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

கேர­ளா­வில் உள்ள ஐக்­கிய அமீ­ரக சிற்­ற­ர­சின் தூத­ர­கத்­தின் பெய­ரைப் பயன்­ப­டுத்தி அம்­மா­நிலத்­துக்­குள் தங்­கம் கடத்தி வரப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக தூத­ரக முன்­னாள் ஊழி­யர் சொப்னா உட்­பட பலர் கைதாகி உள்­ள­னர்.

தவிர, கேர­ளா­வில் இருந்து முதல்­வர் பின­ராயி விஜ­ய­னின் தூண்­டு­தல் கார­ண­மாக வெளி நாடு­க­ளுக்கு டாலர் கடத்­தி­ய­தா­க­வும் குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் கேரள சுங்க இலாகா ஆணை­யா­ளர் சுமித்­கு­மார் மும்­பைக்கு மாற்­றப்­பட்டு உள்­ளார். இதை­ய­டுத்து திரு­வ­னந்­த­பு­ரத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், டாலர் கடத்­த­லுக்கு கேர­ளா­வின் நடப்பு முதல்­வர், சபா­நா­ய­கர் ஆகிய இரு­வ­ரது தூண்­டு­த­லும்­தான் முக்­கிய கார­ணம் என்­றார். சொப்னா தலை­மை­யி­லான கடத்­தல் கும்­பல் தங்­கம், டாலர் கடத்­தல் மூலம் கோடிக்­க­ணக்­கில் பணம் திரட்டி­ய­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"கேர­ளா­வில் நான் பணி­பு­ரிந்த காலத்­தில் கேரளா, லட்­சத்­தீவு வழி­யாக கடத்­தப்­பட்ட பெரு­ம­ளவு பல கிலோ தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. இந்த ஆண்டு மட்­டும் இதுவரை சுமார் ஒரு டன் கடத்­தல் தங்­கம் சிக்கி உள்­ளது," என்­றார் சுமித்­கு­மார்.

கடத்­த­லில் முதல்­வர் பின­ராயி விஜ­ய­னுக்கு உள்ள தொடர்பு குறித்து சொப்னா வாக்­கு­மூலம் அளித்­தி­ருப்­ப­தா­க­வும் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர் கருதுவதாகவும் ஊடகத்தில் தகவல் வெளியாகி உள்ளது.